Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

videos
சேமி டிப்பிட் ஊழியங்கள் - ஒளிக்காட்சி

எங்கள் ஒலி, ஒளி நாடாக்கள் மற்றும் ஸிடி, விஸிடி தியானமையத்துக்கு உங்களை வரவேற்கிறோம். அங்கு நீங்கள் சேமி டிப்பிற்றினுடைய உணர்ச்சியூட்டக்கூடியதும் அறிவுபூர்வமுமான செய்திகளைக் கேட்கலாம். இந்தச் செய்திகள் உங்கள் இருதயத்தை உற்சாகப்படுத்தும், நீங்கள் கிறிஸ்துவில் வளர உதவிசெய்யும், வேதத்தை அதிகமாய்க் கற்றுக்கொள்ள ஒத்தாசைபுரியும். இந்தச் செய்திகளை நீங்கள் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தில் மட்டுமேயுள்ள செய்திகளடங்கிய ஒலி, ஒளித்தட்டுகளுண்டு. அவைகள் ஆங்கிலம் அறிந்தவர்களுக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் சேமி டிப்பிற் ஆங்கிலத்தில் பேசியதும் பல்வேறு மொழிகளில் மொழியாக்கஞ் செய்யப்பட்டதுமான அநேக செய்திகளுண்டு. நேரடி மொழியாக்கஞ் செய்யப்பட்டுள்ள சில செய்திகளுமுண்டு. இவைகளெல்லாம் மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்தவ வளர்ச்சி: கிறிஸ்தவ வாழ்கையில் நீங்கள் வளருவதற்கு உதவியான செய்திகளை சேமி டிப்பிற் கொடுக்கிறார். நீங்கள் எவ்வாறான கிறிஸ்தவர்களாக வளரவேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ அந்நிலைக்கு எவ்வாறு வரலாம் என்பதற்குரிய நடைமுறை வழிகளை இந்தச் செய்திகள் அளிக்கின்றன.

தலைமைத்துவம்: ஆவிக்குரிய தலைமைத்துவத்துக்குரிய தொடர்செய்திகளை சேமி டிப்பிற் கொடுக்கிறார். மற்றவர்களை ஆவிக்குரிய காரியங்களில் வழிநடத்த விரும்புகிறவர்கள் ஒவ்வொருவரும் இந்தச் செய்திகளைக் கேட்பது அவசியம். தலைமைத்துவத்தின் நான்கு படிகள் வழியாக உங்களை சேமி டிப்பிற் அழைத்துச் செல்லுவதோடு, ஒரு ஆவிக்குரிய தலைவனாவதற்குத் தேவையான பண்புகளையும் அவர் காண்பிக்கிறார்.