Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
கொஞ்சத்தில் உண்மையாயிருப்பது

தேவன் என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கினார் என்பதே என் சாட்சியின் சுருக்கம் என்று நான் உங்களோடு பகிர்ந்துகொண்டேன். தேவனுடைய மிகவும் அற்புதமான காரியங்களிலொன்று 1970-ன் ஆரம்பத்தில் கிழக்கு பெர்லினில் நடந்தது. கிழக்கு ஜெர்மனியிலுள்ள ஒரு வயதுமுதிர்ந்த போதகரோடு நான் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு இலட்சம் கடினமான நாத்தீக கம்யூனிச வாலிபர்கள் மறுஆண்டு கிழக்கு ஜெர்மனியில் கூடுவார்களென்று அவர் சொன்னார். அவர்கள் உலகத்தின் எல்லாப் பாகங்களிலிருந்தும் வருவார்களென்றும், கம்யூனிசத்தையும் நாத்தீகத்தையும் உலகமெங்கும் பரப்ப அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுமென்றும் அவர் சொன்னார். அதன்பின்பு அவர் எனக்கு நேரே பார்த்து, இந்தக் கூட்டங்களுக்கு நீ வந்து இந்த வாலிபர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும் வாய்ப்புக்காக ஜெபிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நான் அதிர்ச்சியுற்றேன். இவ்வாறு செய்வதற்கு அவர்கள் என்னை அனுமதிக்கமாட்டார்கள் என்று நான் மறுப்புக் கூறினேன். ஆனால், அந்தப் போதகர் என்னை எளிதாக விடுவதாயில்லை. இது தவறான சுயாதீனத்தைப் பொறுத்தக் காரியம்; உலகத்தில் மாயமான விடுதலையைக்குறித்து மக்களுக்குக் கூறிக்கொடுக்க அவர்கள் முயற்சிப்பார்கள்; எனவே, நீ இதைக்குறித்து ஜெபிக்கவேண்டும் என்று அவர் மறுபடியும் என்னிடம் சொன்னார்.

நான் ஒரு தவறு செய்தேன், நான் அதைக்குறித்து ஜெபித்தேன். போ என்கிற ஒரு வார்த்தையில் தேவனுடைய பதில் என் இருதயத்தின் ஆழத்தில் கேட்டது. என்னுடைய இரண்டு நண்பர்களோடு நான் ஜெர்மனிக்குச் சென்றேன்; கம்யூனிச இளைஞர் கூடியிருந்த உலகப் பெருவிழாவிற்குள் நாங்கள் ஊடுருவினோம். எங்கள் கண்களையே எங்களால் நம்ப முடியவில்லை. எல்லாத் திசைகளிலும் கண்ணுக்கெட்டும் தூரம்வரை கம்யூனிச வாலிபர்களின் கூட்டமே காணப்பட்டது. அவர்களை நாங்கள் எவ்வாறு கிறிஸ்துவுக்காக ஆதாயஞ்செய்ய முயற்சித்தோம் என்பதை இப்போது நான் விளக்கவில்லை. ஆனால், அவர்களில் 200 பேர் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களில் 96 சதமானம் வாலிபர்கள் கிறிஸ்துவுக்கான தங்கள் அர்ப்பணத்தில் நிலைத்திருந்ததோடு, அவர்கள் சென்ற இடமெல்லாம் திருச்சபை ஊழியங்களில் பங்கெடுத்தார்கள்.

அவர்களுடைய பல சபைகளில் செய்திகொடுக்க நான் அழைக்கப்பட்டேன். அதின்பலனாக இன்று உலகமெங்கும் பரவிக்கிடக்கிற ஒரு நற்செய்தி ஊழியம் உருவாயிற்று. அந்த அனுபவத்திலிருந்து நான் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். நம்மைத் தேவன் அழைத்த அழைப்புக்கு நாம் உண்மையுள்ளவர்களாயிருப்போமேயானால் அவர் தம்முடைய தெய்வீகத்தை வெளிப்படுத்தி நம்மை வியப்பிலாழ்த்துவார்; அப்போது நாம் கேட்கிறதையும் நினைக்கிறதையும்விடக் கூடுதலாகச் செய்ய அவர் வல்லமையுள்ளவர் என்று வேதம் சொல்லுவதின் பொருளை நாம் புரிந்துகொள்ளுவோம்.

கிறிஸ்தவ வாழ்க்கையில் நீங்கள் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாயிருக்கிறீர்களா? அப்படியானால் ஒருநாள் உங்களுடைய கற்பனைக்கு அதிகமான காரியங்களால் தேவன் உங்களை ஆச்சரியப்படுத்துவதை நீங்கள் கண்டுகொள்ளுவீர்கள். கொஞ்சத்தில் உண்மையாயிருப்பவனை அதிகத்துக்கு அதிகாரியாக்குவதாக இயேசு சொன்னார்.