Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
பூரண சத்தியம்

அநேக ஆண்டுகளுக்குமுன் கிறிஸ்துவை நான் ஏற்றுக்கொண்டபின், நான் பெற்ற சமாதானத்தை என் நண்பர்களும் பெறவேண்டுமென்று நான் உடனடியாக ஆசித்தேன். என்னுடைய நண்பர்களில் சிலர் வியட்நாமிலிருந்து குழம்பிய மனதோடு திரும்பியிருந்தார்கள்; வேறுசிலர் ஊனமுற்றிருந்தார்கள்; சிலர் திரும்பி வரவேயில்லை. அது மிகவும் கவலைக்கேதுவான காலமாயிருந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் கட்டியெழுப்பப்பட்ட அஸ்திவாரமாகிய, பாரம்பரியத்துக்குரியதும் வேதம் கற்பிக்கிறதுமான சன்மார்க்கக் கருத்துக்களை என் தோழர்களில் அநேகரும் தூக்கிவீச ஆரம்பித்திருந்தார்கள். சிலர் நாத்தீகர்களாகிவிட்டார்கள். தேவனுடைய வசனத்தின் பூரண சத்தியத்தை நான் உணர்ந்திராவிட்டால் ஒருவேளை நானும் அவர்களைப்போலாகியிருப்பேன்.

நான் கிறிஸ்துவை விசுவாசித்ததினால் என்னுடைய வாழ்க்கையில் மாற்றமேற்படவே, என் கல்லூரிப் பேராசிரியர்களில் சிலர் என் விசுவாசத்தைக் கேள்விகேட்க ஆரம்பித்தார்கள். குறிப்பாக அவர்களில் ஒருவர், வேதமும் கிறிஸ்தவ விசுவாசமும் உண்மையல்ல என்று நிரூபிப்பது தன் கடமை என்று எண்ணினவர்போல செயல்பட்டார். ஒவ்வொருநாளும் அவர் வேதத்திலிருந்து ஏதாவது ஒரு பகுதியை எடுத்துக் கூறி கிறிஸ்தவர்களைப் பரிகசித்தார். அன்று முழுவதும் நான் கல்லூரியின் நூலகத்துக்குச் சென்று, வேதத்தைக் கற்று, அந்தப் பேராசிரியர் சொன்னதைச் சரிபார்க்க ஆராய்ச்சி செய்தேன். ஒவ்வொரு தருணத்திலும் அவர் அந்த வேதபகுதி எழுதப்பட்ட சந்தர்ப்பத்தை விட்டுவிட்டு, அதை அவர் தவறுதலாக எடுத்தாண்டாரென்பதையும், அல்லது அந்த வேதபாகத்தின் கருத்தைத் தன்னுடைய நோக்கத்திற்காகத் திரித்துக் கூறினாரென்பதையும் நான் கண்டுகொண்டேன்.

அப்போது நான் இளைஞனாயும் புதுக்கிறிஸ்தவனாயுமிருந்தபடியால் சத்தியத்தை அறிந்துகொள்ள ஆசித்தேன். எவ்வளவுக்கதிகமாக நான் அறைகூவப்பட்டேனோ அவ்வளவு துரிதமாக வேதம் சத்தியம் என்கிற முக்கிய முடிவுக்கு நான் வந்துவிட்டேன். வேதபுத்தகத்தை நம்ப முடியும், அதில் கூறப்பட்ட சரித்திர சம்பவங்கள் மிகச் சரியானவை. அது வார்த்தையின்படியே தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது; சன்மார்க்க வாழ்க்கைக்கு முற்றிலும் ஏற்றது. அதின் கொள்கைகள், கலாச்சாரம், இனம், நாடு மற்றும் மொழி என்னும் தடைகளையெல்லாம் கடந்து நிற்கின்றன. மனித இருதயத்தின் முக்கியமான தேவைகளை வேதம் சந்திக்கிறது. தேவனுடைய வசனத்தால் முறிந்த விவாக உறவுகள் சீர்செய்யப்பட்டதையும் உடைந்த உள்ளங்கள் ஆற்றப்பட்டதையும் தார்மீக நிலைகள் மாற்றப்பட்டதையும் நான் கண்டிருக்கிறேன். எல்லாக் கண்டங்களிலுள்ள மக்களும் வேதவாக்கியங்களாகிய கற்பாறையிலேயே தங்கள் வாழ்க்கையைக் கட்டியெழுப்புகிறார்கள்.

அநேக ஆண்டுகளுக்குமுன், உம்முடைய வசனம் சத்தியம் என்று சங்கீதக்காரன் சொன்னார். இந்த நூற்றாண்டிலும் அவர் சொன்னது பொருத்தமானதே. நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்களென்பது முக்கியமல்ல, எதையாவது விசுவாசிப்பதுதான் தேவை என்று சிலர் உங்களிடம் சொல்லலாம். ஆனால், நம்பிக்கைக்குரிய ஒரேயொரு புத்தகம் மாத்திரமேயுண்டு என்று நான் உங்களோடு சொல்லிக்கொள்ளட்டும். எனவே, நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்களென்பது மிகவும் முக்கியமே. சமுதாயமும் எல்லா மனித உறவுகளும் நம்பிக்கையிலேயே கட்டியெழுப்பப்படவேண்டும், நம்பிக்கை சத்தியத்தில் கட்டியெழுப்பப்படுகிறது. நீங்கள் ஏன் இன்றைக்கு வேதபுத்தகத்தைத் திறந்து பூரண சத்தியத்தைக் கண்டுகொள்ளக்கூடாது?