Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
ஜெபம், உயிர்மீட்சி மற்றும் நற்செய்திப்பணிக்கிடையேயுள்ள தொடர்பு

நான் ருமேனியாவுக்கு முதன்முறையாகச் சென்றேன். அந்த நாட்டில் தேவன் வல்லமையாக அசைவாடிக்கொண்டிருந்ததைக்குறித்து நான் கேள்விப்பட்டிருந்தேன். தேவனுடைய மக்கள்மத்தியில் அவருடைய பிரசன்னம் வெளிப்பட்டிருந்த இடத்திற்குள் நான் பிரவேசித்ததுபோன்ற உணர்ச்சியடைந்தேன். கடந்த காலங்களில் நடைபெற்ற எழுப்புதல்களின் சரித்திரத்தை நான் வாசித்திருக்கிறேன்; நான் இருந்த பட்டணத்தில் காண்கிறதைப்போன்றே அவைகள் இருந்திருக்குமென்று என்னால் ஊகிக்க முடிந்தது. ஆலய ஆராதனை ஆரம்பிப்பதற்கு அநேக மணிநேரங்களுக்கு முன்னமேயே மக்கள் ஜெபிப்பதற்குக் கூடிவந்தார்கள். அன்றிரவு ஆராதனை ஆரம்பித்ததும் ஆலயம் நிரம்பி வழிந்தது; இருக்கைகளுக்கு இடையிலுள்ள எல்லா இடங்களிலும், பீடத்தினருகாமையிலும், ஆலயத்துக்கு வெளியிலுங்கூட மக்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

அது 1980-ம் ஆண்டு; ருமேனியாவிலுள்ள விசுவாசிகள் கொடூரமாய் உபத்திரவப்படுத்தப்பட்டார்கள். சில கிறிஸ்தவர்கள் விசுவாசத்தினிமித்தம் தங்கள் பணியை இழந்தார்கள்; சிலர் அடிக்கப்பட்டார்கள், சிலர் சிறையிலடைக்கப்பட்டார்கள். கிழக்கு ஐரோப்பா முழுவதுமுள்ள கிறிஸ்தவர்களில் ருமேனியாவிலுள்ளவர்கள்தான் மிகவும் கடுமையான உபத்திரவம் அனுபவித்தார்களென்று நம்ப ஏதுவுண்டு. ஆயினும், அந்நாட்டில் பரிசுத்தஆவியானவருடைய செயல்பாட்டை நிறுத்தவே முடியாததுபோலிருந்தது. அந்நாட்களில் ஒரேடியா என்னும் பட்டணத்திலுள்ள மிகப்பெரிய இம்மானுவேல் பேப்றிஸ்ட் ஆலயத்தில் செய்தி கொடுத்ததை நான் ஒருநாளும் மறக்க முடியாது. அநேகர் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். ஆராதனையின் முடிவில் ஒரு தலைவர் என்னிடம் வந்து, சகோதரன் சேமி அவர்களே, தேவன் இன்று செயல்பட்டாரா? என்று கேட்டார். அக்கேள்வி எனக்குக் குழப்பத்தை உண்டாக்கியது. ஆலயம் நிரம்பி வழிந்ததையும், வெளியே மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டு நின்றதையும் நீங்கள் காணவில்லையா? செய்திக்குப்பின் அழைப்புக்கொடுக்கப்பட்டபோது அநேகர் முன்வந்ததை நீங்கள் கவனிக்கவில்லையா? அப்படியிருக்க, நீங்கள் ஏன் இந்தக் கேள்வி கேட்டீர்கள் என்று நான் வியப்போடு வினவினேன். அந்த தேவ மனிதன் புன்சிரிப்போடு, நான் ஆலயத்துக்குள்ளே வரவில்லை; நீங்கள் பிரசங்கித்த நேரம் முழுவதும் வேறொரு அறையில் 100 ஆண்களோடு சேர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தேன்; இன்னொரு அறையில் 100 பெண்கள் அவ்வாறே ஜெபித்துக்கொண்டிருந்தார்கள் என்று பதிலளித்தார். நான் பேச்சற்று நின்றேன். நான் பிரசங்கித்த நேரம் முழுவதும் 100 ஆண்களும் 100 பெண்களும் எனக்காக ஜெபித்த அனுபவம் வேறெங்கும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆகவே, இங்கு அநேக மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதில் வியப்பொன்றுமில்லை.

அந்நாட்டில் அநேக ஆண்டுகளுக்குமுன் ஒரு போதகர், திருச்சபை மனந்திரும்பி தேவனுடைய முகத்தைத் தேடவேண்டுமென்று அழைப்புக்கொடுத்தபோது அங்கு உயிர்மீட்சி ஏற்பட்டது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத நபர்களுடைய பெயர்களை எழுதிவைத்து, அவர்களுக்காக ஜெபிக்கும்படி அவர் கற்பித்தார். எனவே, நாத்தீகர்களுக்காகவும், தங்களைத் துன்பப்படுத்தினவர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும், குடும்பத்தினருக்காகவும், உடன் பணியாளர்களுக்காகவும் மக்கள் ஜெபிக்க ஆரம்பித்தார்கள். எனவே, உயிர்மீட்சி தேவஜனத்தின் இருதயங்களில் ஆரம்பமானது; கிறிஸ்தவர்களல்லாத அநேகர் கிறிஸ்துவை அறிய ஆரம்பித்தார்கள். அதன்பலனாக அந்தத் திருச்சபை ஐரோப்பாவில் மிகவும் பெரிய திருச்சபையாயிற்று. அவர்களது சுவிசேஷப்பணி உயிர்மீட்சியிலிருந்து உருவானது; அந்த உயிர்மீட்சி தேவஜனத்தின் ஜெபத்தினால் ஏற்பட்டது.

திருச்சபைச் சரித்திரம் முழுவதும் சிறப்பான ஆத்தும அறுவடை இந்த மாதிரியைப் பின்பற்றியேயிருந்தது. அப்போஸ்தலர் நடபடிகளில் கூறப்பட்டுள்ளதுபோல, எருசலேம் திருச்சபை இவ்வாறே வேகமாய் வளர்ந்து பெருகிற்று. அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள் (அப்.4:31) என்று வேதம் சொல்லுகிறது. அந்த வசனத்தின்படி நான்கு காரியங்கள் அங்கு நடைபெற்றன. முதலாவது, அவர்கள் ஜெபித்தார்கள். இரண்டாவது, தேவன் எல்லாவற்றையும் அசைத்தார். மூன்றாவது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டார்கள். இறுதியாக, தேவனுடைய வசனத்தைத் தைரியத்தோடு கூறத்தக்கதாக ஒரு புதிய வல்லமையைப் பெற்றுக்கொண்டார்கள்.

ஜெபத்தின் முக்கியமான பலாபலன் நற்செய்திப் பணியே. நாம் தேவனிடம் சேரும்போது அவருடைய பிரசன்னத்தால் நிறைக்கப்படுகிறோம். அவர் அன்பாயிருக்கிறார்; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். ஆகையால்தான் தைரியமாய்ப் பேசத்தக்கதான வல்லமை அவர்களுக்குக் கிடைத்தது. அன்பே உருவான ஒருவருடைய சமுகத்தில் அவர்களிருந்தார்கள். அத்தகைய தெய்வீக அன்பின் முன்பாக பயம் ஓடுகிறது. ஜெபிக்கிற ஒரு திருச்சபை எப்போதும் நற்செய்திப் பணியில் ஈடுபடும். உயிர்மீட்சியும் நற்செய்திப்பணியும் ஒன்றல்ல. ஆனால் நாம் ஜெபிக்கும்போது உயிர்மீட்சியின் பாதையிலிருக்கிறோம்; உயிர்மீட்சி உண்மையாய் ஏற்படும்போது நற்செய்திப் பணியே அதன் தெய்வீக விளைவாகும்.