Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

news

இந்தியா--திரள் கூட்டமான மக்கள்--உயிர்மீட்சிக்குப் பெரிய வரவேற்பு

ஸேமி டிப்பிற் ஊழியங்கள் இந்தியாவின் வடமேற்கு மாநிலமான பஞ்சாபில் சுவிசேஷக் கூட்டங்களும் ஒரு போதகர் மாநாடும் மாணவர் சீஷத்துவப் பயிற்சியும் தற்போதுதான் நிறைவுசெய்தது. ஸேமி டிப்பிற் சுவிசேஷக் கூட்டங்களிலும் போதகர் மாநாட்டிலும் செய்திகொடுத்தார்; டேவ் டிப்பிற் நித்திய கருத்துக்கள் என்ற அவருடைய ஊழியத்தின்மூலமாக மாணவர் சீஷத்துவத்துவ கருத்தரங்குக்குத் தலைமத்துவம் கொடுத்தார்.

IndiaCrowd அந்தப் பகுதியில் டிப்பிற் நடத்தியக் கூட்டங்களில் இந்த சுவிசேஷக் கூட்டங்கள்தான் மிகப் பெரியவையாக இருந்தன. ஒவ்வொரு மாலையிலும் வாழ்க்கையில் வெற்றி என்ற பொருளில் அவர் கொடுத்த செய்திக்கு மக்கள் கீழ்ப்படிந்தார்கள். மக்கள் கூட்டம் இரவுதோறும் கூடிக்கொண்டே வந்தது; செய்தியை ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேவந்தது. கடைசிக் கூட்டத்தில் வந்திருந்தவர்களில் பாதிப்பேரும் செய்திக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

இங்கு பஞ்சாபில் தேவன் அற்புதமான காரியத்தை செய்துகொண்டிருக்கிறார்; மக்கள் திறந்த இருதயத்தோடு சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; பஞ்சாபில் அநேக சீக்கியர்கள் கிறிஸ்துவிடம் வந்திருக்கிறார்கள்; தேவன் செயல்படுகிறதைக் காண்பது உற்சாகமாயிருக்கிறது என்று டிப்பிற் குறிப்பிட்டார். அதை ஒத்துக்கொண்டு போதகர் நாஸிர் மாஸி, பஞ்சாபின் மக்கள் இயேசுவின் நற்செய்திக்கு ஆர்வத்தோடிருக்கிறார்கள்; இந்தத் தருணம் எங்களுக்கு ஒரு பெரிய ஆசீர்வாதமாயிருந்தது என்று கூறினார்.

டிப்பிற் சுவிசேஷக் கூட்டங்களை நடத்தினதுமட்டுமல்லாமல், பஞ்சாபில் வனாந்தரமான ஒரு பகுதியில் போதகர் மாநாடும் நடத்தினார்; இத்தகைய தலைமத்துவ மாநாடுகளில் பங்கெடுக்க சாதாரணமாக சந்தர்ப்பம் கிடைக்காத போதகர்கள் இதில் பங்கெடுத்தார்கள். அதில் அதிகமான போதகர்களும் புதிய விசுவாசிகளும், டிப்பிற்றுக்கு மொழிபெயர்க்கிற ஜாலி சிங்கிடமிருந்து கற்றுக்கொள்ளுகிறவர்களுமாயிருந்தார்கள். தங்கள் வாழ்க்கையில் தேவஆவியானவருடைய ஆழமான கிரியை நடைபெற்றதைக்குறித்து போதகர்கள் சாட்சி பகர்ந்தார்கள். திருச்சபை மிகவும் வேகமாக வளர்ந்துகொண்டேயிருக்கிறது--அதை சிலர் பெருக்கல் முறை என்று விவரித்தார்கள். இந்த மாநாட்டில் பங்கெடுத்த போதகர்களில் அநேகரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் புதியவர்களாயிருந்தார்கள்.

டிப்பிற் முன்பு பஞ்சாபில் ஊழியஞ்செய்தபோது கிறிஸ்துவிடம் வந்த புதிய விசுவாசிகள் பலரையும் அவர் இம்முறை சந்தித்தார். கிறிஸ்துவோடு தொடர்ந்து வாழ்ந்துவருகிற இந்த விசுவாசிகளை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்ளுகிறேன் என்று அவர் சொன்னார்.

டேவ் டிப்பிற்றும் பஞ்சாபில் ஊழியஞ்செய்தார்; அவர் சந்திகாரிலுள்ள மாணவர்களுடைய வாழ்க்கையோடு இடைபட்டார். அவருடைய ஊழியத்தின் சார்பில் நடத்தப்பட்ட சீஷத்துவ கருத்தரங்கில் 65க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுத்தார்கள். டேவ் டிப்பிற்றின் ஊழியம் உலகத்தின் பல பாகங்களிலும் சேமி டிப்பிற் ஊழியத்தோடு சேர்ந்து செயல்பட்டுவருகிறது. தேவனுடைய ஆழமான கிரியையைக்குறித்து வாலிபர்கள் சாட்சி கூறினார்கள்.

மேலும் படங்களுக்கு இங்கு சொடுக்கவும்.