Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

news

பிரேஸிலில் கிறிஸ்துவுக்கான தாக்கம்

ஸேமி டிப்பிற் ஊழியங்கள் பிரேசிலில் இதுவரையிலும் நடத்திய எல்லாக்கூட்டங்களிலும் மிகவும் விரிவான ஒன்று தற்போது முடிவடைந்தது. பிரேஸில் நாட்டில் அனப்போலிஸ் என்ற மிகப்பெரிய திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நற்செய்திப் பெருவிழாவில் ஸேமி டிப்பிற் கொடுத்த செய்திக்கு நூற்றுக்கணக்கானோர் கீழ்ப்படிந்தனர். இக்கூட்டங்களில் சுவிசேஷத் திருச்சபைகள் ப்ங்கெடுத்ததினால், போதகர்களும் கிறிஸ்தவத் தலைவர்களும் பெருமகிழ்ச்சியடைந்தனர். அப்பட்டணத்தின் 104வது ஆண்டுவிழா அந்நாட்களில் நடைபெற்றன.

Dave Speaksஸேமி டிப்பிற் ஊழியங்கள் நடத்தியது இந்த சுவிசேஷக் கூட்டங்கள் மாத்திரமல்ல. கொய்யானியா என்ற பக்கத்துத் தலைநகரில் மாணவருக்காக டேவ் டிப்பிற் சீஷத்துவக் கருத்தரங்கு நடத்தினார். அநேகத் திருச்சபைகளிலுள்ள மாணவர்கள் இதில் பங்கெடுத்தனர்; பங்கெடுக்க விரும்பிய அனைவருக்கும் இடம் கொடுப்பது கடினமாயிருந்தது. டேவ் டிப்பிற் மாணவர்கள் தேவனுடைய மகத்துவத்தை அறியும்படி வழிநடத்தினதோடு, இயேசுவை உண்மையாகப் பின்பற்றுவது என்றால் என்ன என்பதை விளக்கினார்.

Tex Speakingசேமி டிப்பிற்றும் றெக்ஸ் டிப்பிற்றும் ஒரு ஆவிக்குரிய உயிர்மீட்சி மாநாட்டில் போதகர்களையும் அவர்கள் மனைவிமார்களையும் வழிநடத்தினார்கள். றெக்ஸ் டிப்பிற் பெண்களுக்கு செய்தி கொடுத்தார்கள்; சேமி ஆண்களோடு பேசினார். இந்த இரு கூட்டங்களிலும் தேவன் இருதயங்களில் வல்லமையாக செயல்பட்டார்.

----------------------------

ஒரு புதியத் தலைமுறை சுவிசேஷகர்களைப் பயிற்றுவித்தல்

கடந்த டிஸம்பர் மாதம் நடைபெற்ற 40-வது ஆண்டு விழா விருந்தில் சேமி தன்னுடைய ஊழியத்தைத் தாங்குகிறவர்களிடம் தன்னுடைய தரிசனத்தின் ஒரு புதிய பகுதியைப் பகிர்ந்துகொண்டார். அதின் முதற்பலன் சுவிசேஷப் பெருவிழாவின் முன்னதாகக் கிடைத்தது; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் ஊழியத்திற்காக சேமி 12 பிரேசிலிய சுவிசேஷகர்களைப் பயிற்றுவித்தார்.

கடந்த ஆண்டு தேவன் ஒரு புதிய தரிசனத்தை சேமி டிப்பிற் ஊழியத்திற்குக் கொடுத்தார்--அது சுவிசேஷகர்களைப் பெருக்கல் முறையில் அதிகரிப்பதாகும். பிரேசில், இந்தியாபோன்ற உலகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் சிலவற்றிலுளள கிறிஸ்தவத் தலைவர்களின் நல்லாதரவைத் தேவன் நமக்குத் தந்திருக்கிறார்; அந்த நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ந்துவருகின்றன; அதேசமயம், ஆவிக்குரிய நிலையிலும் அவைகள் விருத்தியடைகின்றன. அந்த நாடுகளில் சுவிசேஷ இயக்கங்களும் வேகமாக வளருகின்றன. அந்த நாடுகளில் சுவிசேஷகர்களைப் பெருக்குவதின்மூலம் அவைகளோடு நமக்குள்ள உறவை வலுப்படுத்தவேண்டுமென்று தேவன் என் இருதயத்தோடு பேசியிருக்கிறார் என்று அந்த ஊழியத்தின் ஸ்தாபகரும் தலைவருமாகிய சேமி டிப்பிற் கூறினார்.

Evangelists in trainingசுவிசேஷகர்களைப் பெருக்கல்முறையில் அதிகரிக்கும் முறையின் முதல் முயற்சியைக் கடந்த மாதம் சேமி டிப்பிற் ஊழியம் பிரேசிலில் ஆரம்பித்தது. அந்த நாட்டின் பலபகுதிகளிலிருந்தும் 12 சுவிசேஷகர்கள் கூடிவ்ந்து, சுவிசேஷகர்களின் நடத்தை, திறமை, மற்றும் செய்தி என்பவற்றைக்குறித்து விவாதிக்க சேமி டிப்பிற்றோடு நேரம் செலவிட்டார்கள். சுவிசேஷப்பணியின் கோட்பாடுகளைக்குறித்து டிப்பிற் விளக்கியதைக் கவனிக்க அவர்கள் சமயம் செலவிட்டதோடு, தாங்கள் கற்றதை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை விவாதிக்க அதன்பின்னர் அவர்கள் சிறு குழுக்களாக கூடினார்கள். செய்தியளிக்கப் பயிற்சியெடுக்கவும் அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. p>

ஒவ்வொரு சுவிசேஷகனும் மூன்று ஆண்டுகள் சேமி டிப்பிற் ஊழியத்தின்கீழ் செயல்படத் தங்களை ஒப்படைத்தார்கள். அந்தக் காலகட்டத்தில் அவர்கள் சுவிசேஷக் கூட்டங்கள் நடத்துவார்கள். அதற்கப்புறம் தாங்களாகவே பக்குவப்படுத்தி எடுக்கக்கூடிய மூன்று சுவிசேஷகர்களைத் தேவன் தங்களுக்குத் தரும்படி அவர்கள் தேவனிடத்தில் வேண்டுதல் செய்வார்கள். நான் போதகராயிருந்தபோது, ஆவிக்குரிய பெருக்கல்முறையின் வல்லமையைக் கற்றுக்கொண்டேன். இந்த சுவிசேஷகர்களிடமும் அதே நிலை நடைபெறுகிறதைக் காணமுடியும் என்று நான் ஜெபிக்கிறேன். இதைப் பிரேசில் நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலுங்கூடக் கொண்டுநடத்தத் திட்டமிடுகிறோம். இக்காலத்தில், இந்த ஊழியத்தைப் பெருப்பிக்க தனிச்சிறப்பான நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன் என்று டிப்பிற் சொன்னார்.

போதகர் சேமியைக் கேட்கக் கிடைத்தது என் வாழ்க்கையில் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கொடுத்த மிகப்பெரிய அனுபவம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. அது அசாதாரணமானது. தேவனுடைய இருதயத்திலிருந்து என்னுடைய இருதயத்திற்குக் கருத்துக்களைக் கொண்டுவந்த போதகர் சேமியின் வாழ்க்கைக்காக நான் தேவன ஸ்தோத்தரிக்கிறேன் என்று ஒரு சுவிசேஷகர் குழுவின் கருத்துக்களைத் தொகுத்துக் கூறினார்.

மேலும் படங்களுக்கு இங்கு சொடுக்கவும்.