Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

news

சேமி டிப்பிற் ஊழியங்கள் 40 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடியது

Sammy & Texடேவ் எங்க்பிரெட் என்ற போதகர் சேமி டிப்பிற் ஊழியங்களின் நண்பர்களையும் ஆதரவாளர்களையும் பார்த்து, உங்களுக்குத் தரிசனத்தைவிடக் கூடுதல் நினைவுகள் இருக்குமேயானால், நீங்கள் உங்கள் இறுதி அத்தியாயத்தை எழுதுகிறீர்கள் என்று சொன்னார். இந்தியானா போதகரும் சேமி டிப்பிற் ஊழியங்களின் மன்றக்குழு உறுப்பினருமாகிய அவர் தொடர்ந்து, சேமி டிப்பிற்றுக்கு ஏராளம் நினைவுகள் உண்டு; ஆனால் அதைவிடக் கூடுதல் தரிசனம் உண்டு என்று அவரை அறிந்த உங்களுக்குத் தெரியுமென்றும் கூறினார். சேமி டிப்பிற் ஊழியங்கள் 40 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடியபோது, 5 நாடுகளிலிருந்தும், 15 மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த அந்த ஊழியங்களின் நண்பர்கள் கடந்த காலங்களிலுள்ள சாட்சிகளுக்கும் வருங்காலத்துக்கான அறிக்கைக்கும் செவிகொடுத்தார்கள்.

Jerry Jenkinsசான் அன்றோணியோவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 'பின்னால் விடப்பட்டோர்' (Left Behind) என்ற மிகவும் சிறப்பு வாய்ந்த புத்தகத்தை எழுதிய ஜெறி ஜெங்கின்ஸ் என்பவர் தலைமை தாங்கினார். அவர் எழுதிய முதல் புத்தகம் சேமி டிப்பிற்றின் வாழ்க்கைச்சரித்திரம் என்று அவையொரிடம் அவர் பகிர்ந்துகொண்டார். ஜெங்கின்ஸ் 23 வயதும் சேமி 25 வயதாயிருக்கும்போது செயல்பாட்டில் தேவனுடைய அன்பு என்னும் புத்தகத்தை சேர்ந்து எழுதினர். சேமி டிப்பிற் ஊழியம் எவ்வாறு உதயமாயிற்று என்பதைக்குறித்த ஒரு ஒளிக்காட்சி அன்று மாலையில் நடந்த மிகச்சிறப்பான நிகழ்வாகும்.

லூஸியானா மாநிலத்தில் மன்றோ என்னுமிடத்தில் ஒரு சிற்றாலயத்தில் சேமி வாலிபர்க்கான கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தபோது, அத்திருச்சபையில் உயிர்மீட்சியின் காற்று வீசிற்று. எனவே, சேமியும், அவரது மனைவி டெக்ஸும் அவர்களோடு ஏழு வாலிபர்களும் சேர்ந்து ஒரு கைவண்டி நிறைய வேதபுத்தகத்தை வைத்து, அதைத் தள்ளிக்கொண்டே அமெரிக்காவின் பல பாகங்களுக்கும் நடந்துசென்று அந்த வேதபுத்தகங்களை வினியோகிக்கவும் மக்களைத் தேவனண்டை அழைக்கவும் தீர்மானித்தார்கள். தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புங்கள் என்று மக்களை அழைத்ததோடு, பல்கலைக்கழக வளாகங்களில் செய்திகள் கொடுத்தபோது, தேவன் நாடுமுழுவதுமுள்ள பட்டணங்களில் அசைவாட ஆரம்பித்தார்.

அந்த வாலிபர்கள் மன்றோ எழுவர் என்று அழைக்கப்பட்டார்கள். 1970-ல் அந்த நடைபயணத்தை முடித்தபின் அவர்கள் பின்பு ஒருபோதும் கூடிவரவில்லை. ஆயினும் அவர்களில் ஆறுபேர் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார்கள்; அவர்களை ஜெங்கின்ஸ் நேர்காணல்செய்தார்.

Kanveeசேமி டிப்பிற் ஊழியங்களின் வருங்காலத் தரிசனத்திற்குநேராக கவனத்தை செலுத்துமுன் அதின் அகில உலக ஊழியத்தைக்குறித்த ஒரு ஒளிக்காட்சி காண்பிக்கப்பட்டது. இந்த ஊழியத்தின் பங்காளிகளைப் போதகர் .எங்க்பிரெட் நேர்காணல் செய்யுமுன் லைபீரியாவிலிருந்து வந்திருந்த பிரசித்திபெற்ற கிறிஸ்த்தவப் பாடகராகிய கன்வீ கெயின்ஸ் பாடல்கலளைப் பாடினார். தற்போதைய லைபீரியா என்பதைக்குறித்தும் நித்திய கோட்பாடுகள் என்னும் தன்னுடைய ஊழியத்துக்கும் சேமி டிப்பிற் ஊழியத்துக்குமிடையேயுள்ள தொடர்புகுறித்தும் டேவ் டிப்பிற் பகிர்ந்துகொண்டார். ஒரு புதிய தலைமுறை சுவிசேஷகர்களைப் பயிற்றுவிக்கவும் இளைஞர்களை சீடராக்கவும் இந்த இரு ஊழியங்களும் எவ்வாறு இணைந்து செயல்படமுடியும் என்பதைக்குறித்தும் டேவ் கூறினார். பிரேஸிலை சந்திக்கவும் உயிமீட்சியின் செய்தியைப் பரப்பவும் அந்நாட்டில் ஒரு புதிய தலைமுறை சுவிசேஷர்களைப் புறப்படுவிக்கவும் எவ்வாறு சேமி டிப்பிற் ஊழியமும் பிரேஸில் மக்களும் கூட்டுப்பங்காளித்துவம் கொள்ளமுடியும் என்பதைக்குறித்து பிரேஸிலிலுள்ள போதகராகிய டெர்ஸியோ ட ஸௌஸா எடுத்துரைத்தார். இந்தியாவைக்குறித்த இதேவிதமானதொரு தரிசனத்தை விஜயக்குமார் பகிர்ந்துகொண்டார்.

வருங்காலத்துக்காகத் தேவன் தனக்குக் கொடுத்துள்ள தரிசனத்தை சேமி டிப்பிற் இறுதிக் குறிப்பாகக் கூறினார். அந்தத் தரிசனத்தின் சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

சுவிசேஷர்களைப் பெருக்குதல்

 1. உலகத்தில் சேமி டிப்பிற் ஊழியம் அறியப்பட்டுள்ள ஐந்து பிராந்தியங்களில் பத்து சுவிசேஷர்களைக் கண்டறிவது
 2. பறைசாற்றும் சுவிசேஷகர்களாக அவர்கள் பணிசெய்ய அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சியளிப்பது
 3. அதற்குப்பின் வரும் மூன்று ஆண்டுகளில் அவர்களில் ஒவ்வொருவரும் ஐந்து வேறு சுவிசேஷகர்களுக்குப் பயிற்சியளிப்பது
 4. அதற்கடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் பத்து இலட்சம் மக்களுக்கு அதிகமானபேருக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும் 250 சுவிசேஷகர்களை அடைவது.

ஊழியங்களை ஒருங்கிணைப்பது

அகன்றதும் ஆழமானதுமான தாக்கத்தை உண்டாக்க கடந்த நாற்பது ஆண்டுகளாக சேமி டிப்பிற் ஊழியங்கள் மேம்படுத்திய வெவ்வேறு ஊழியங்களை சேர்க்கவேண்டும். கீழே தரப்பட்டுள்ளவைகள் அந்த ஊழியங்களில் சில.

 • உலகத்திலுள்ள ஐந்து பிராந்தியங்களில் கிறிஸ்த்தவத் தலைவர்கள் மத்தியில் உயிர்மீட்சியைக்குறித்த சுவிசேஷக்கூட்டங்களையும் மாநாடுகளையும் தொடருவது
 • உலகத்திலுள்ள ஐந்து பிராந்தியங்களில் முக்கியமான சுவிசேஷகர்களுக்குப் பயிற்சியளிப்பது
 • சுவிசேஷகர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இணையதளத்தை உருவாக்குவது. அந்தத்தப் பிராந்திய மொழியில் இணையதளம் இருக்கவேண்டும்.
 • சுவிசேஷகர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தொலைக்காட்சி செய்திகள் கொடுக்கப்பட ஒழுங்குகள் செய்யப்படவேண்டும்
 • தொலைக்காட்சி செய்திகள் நேரடியாக ஒளிபரப்படுகிற பிராந்தியங்களில் உயிர்மீட்சிக்கான உள்ளக்கதறல் மாநாடுகள் நடத்தப்படவேண்டும்

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தாக்கம் உண்டாக்குதல்

 1. 2011-ம் ஆண்டு வசந்த காலத்தில் பந்தய ஓட்டம் என்னும் சேமியின் புதிய புத்தகத்தை வெளியிடுவது. வாசிப்பவர்களில் தனித்தாள் எழுப்புதலை இப்புத்தகம் இலக்காக்கும; வேதவசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதின்படியே ஒரு பந்தய வீரனுடைய பார்வையினூடே தனித்தன்மையோடு இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
 2. வட அமெரிக்காவில் உயிர்மீட்சிக்கான மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும்
 3. லூஸியானா கல்லூரியில் ஆவிக்குரிய விழிப்புணர்ச்சிக்கான ஒரு மையம் ஏற்படுத்த உதவிசெய்யப்படவேண்டும்

மேலும் படங்களுக்கு இங்கு சொடுக்கவும்