Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

news

இந்தியப் போதகர்கள் வாழ்க்கையின் ஓட்டத்துக்காக உயிர்ப்பிக்கப்பட்டார்கள்

இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமான தமிழ்நாட்டில் சேமி டிப்பிற் இரண்டு போதகர்கள் மாநாடு ந்டத்தினார். ஏறக்குறைய 2,000 போதகர்கள் இந்த மாநாடுகளில் பங்கேற்று தேவன் தங்களுக்குக் கொடுத்திருக்கிற ஓட்டத்தை ஓட பெலன் பெற்றுக்கொண்டார்கள். மதுரையில் நடந்த முதல் மாநாட்டில் 500 பேரும் சென்னையில் நடத்தப்பட்ட இரண்டாம் மாநாட்டில் 1,300 பேருமாக போதகர்களும் கிறிஸ்தவத் தலைவர்களும் ப்ங்கெடுத்தார்கள்.

Sammy preachesஓட்ட்த்தைக்குறித்து சேமி கொடுத்த செய்திகளைப் போதகர்கள் உன்னிப்பாகக் கவனித்தார்கள். எனக்கு மொழிபெய்ர்ப்பது கடினமாக இருந்தது; என்னுடைய ஊழியத்தில் கடினமான காலத்தை நான் கடந்து போய்க்கொண்டிருக்கிறேன்; இந்த செய்தி குறிப்பாக எனக்குரியது என்று ஒரு மொழிபெயர்ப்பாளர் கூறினார். இங்கு தேவையானது இந்த செய்திதான் என்று ஒரு போதகர் சொன்னார்.

இக்கூட்டங்களில் உள்ளங்கள் உடைந்த நிலை காணப்பட்டது. தங்களை உயிர்ப்பிக்கவும், வாழ்க்கையின் கடினமான குன்றுகளில் ஏறத் தங்களுக்குப் பெலனளிக்கவும் தேவனிடத்தில் வேண்டுதல் செய்ய போதகர்கள் நேரம் செலவிட்டார்கள். டி. எஸ். ஸ்பர்ஜன் என்ற இந்திய ஊழியரும் போதகர்களுக்கு செய்திகொடுத்தார். தங்களுக்குத் தேவன் கொடுத்துள்ள அழைப்பில் உண்மையுள்ளவர்களாயிருக்கும்படி போதகர்களை அவர் ஊக்குவித்தார்.

Praying தமிழ்நாட்டில் எழுப்புதல் அனுப்ப தேவன் சித்தமாயிருக்கிறார். இந்தியாவில் கிறிஸ்தவம் இங்குதான் ஆரம்பித்தது. அப்போஸ்தலனாகிய தோமா இங்குதான் நற்செய்தியைக் கொண்டுவந்தார். இந்தத் தலைமுறையில் தேவன் தம்முடைய ஜனங்களை உயிர்ப்பிக்கட்டும் என்று நான் ஜெபிக்கிறேன் என்று சேமி கூறினார்.

தங்கள் பெலன் புதுப்பிக்கப்படத்தக்கதாகத் தேவனுடைய சமுகத்தில் காத்திருப்பதற்கு சேமி அழைப்புக்கொடுத்தபோது நூற்றுக்கணக்கான போதகர்கள் முன்வந்தார்கள். தங்களுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் ஆழமாகக் கிரியைசெய்யும்படி அநேகர் கதறி அழுதார்கள். திருச்சபை சரித்திரத்தில் மிகச்சிறந்த எழுப்புதலை இந்தியா சந்திக்கமுடியும் என்று நான் நம்புகிறேன். மக்கள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இந்த நாடு பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது; இது உலகத்திலேயே மிகப் பெரிய குடியரசு. இந்த தன்மைகளெல்லாம் இணைந்து ஆவியானவர் வீசிக்கொண்டிருக்கும் திசைக்கு இந்த நாடு கொண்டுசெல்லப்படுகிற்து என்று சேமி சொன்னார்.