Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

news

பிரேஸிலில் அறுவடை - 2012

BrazilFriendsஇம்பரேற்றிஸில் அறுவடை

பிரேஸில் நாட்டின் இம்பரேற்றிஸிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஒரு சிறப்பான நேரம். அது அறுவடையின் காலம். தேவனுடைய ஆவியானவரின் ஒரு அசைவாடுதல். மேய் மாதத்தில் ஸேமி டிப்பிற் நடத்திய சுவிசேஷக் கூட்டங்கள் மேற்கண்டவாறு விவரிக்கப்பட்டன. ஆர்வங்கொண்ட இருதயத்தோடு வந்த மக்களால் நிறைந்த கூட்டத்தில் ஸேமி இரண்டு இரவுகள் செய்தி கொடுத்தார்; அந்த ஆத்துமாக்கள் ஜீவ அப்பத்தின் ஆதாரத்தைக் கண்டுகொண்டனர்.

கட்டுரையை வாசிக்கவும்

இந்தியா--திரள் கூட்டமான மக்கள்--உயிர்மீட்சிக்குப் பெரிய வரவேற்பு

ஸேமி டிப்பிற் ஊழியங்கள் இந்தியாவின் வடமேற்கு மாநிலமான பஞ்சாபில் சுவிசேஷக் கூட்டங்களும் ஒரு போதகர் மாநாடும் மாணவர் சீஷத்துவப் பயிற்சியும் தற்போதுதான் நிறைவுசெய்தது. ஸேமி டிப்பிற் சுவிசேஷக் கூட்டங்களிலும் போதகர் மாநாட்டிலும் செய்திகொடுத்தார்; டேவ் டிப்பிற் நித்திய கருத்துக்கள் என்ற அவருடைய ஊழியத்தின்மூலமாக மாணவர் சீஷத்துவத்துவ கருத்தரங்குக்குத் தலைமத்துவம் கொடுத்தார்.

கட்டுரையை வாசிக்கவும்

பிரேஸிலில் கிறிஸ்துவுக்கான தாக்கம்

ஸேமி டிப்பிற் ஊழியங்கள் பிரேசிலில் இதுவரையிலும் நடத்திய எல்லாக்கூட்டங்களிலும் மிகவும் விரிவான ஒன்று தற்போது முடிவடைந்தது. பிரேஸில் நாட்டில் அனப்போலிஸ் என்ற மிகப்பெரிய திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நற்செய்திப் பெருவிழாவில் ஸேமி டிப்பிற் கொடுத்த செய்திக்கு நூற்றுக்கணக்கானோர் கீழ்ப்படிந்தனர். இக்கூட்டங்களில் சுவிசேஷத் திருச்சபைகள் ப்ங்கெடுத்ததினால், போதகர்களும் கிறிஸ்தவத் தலைவர்களும் பெருமகிழ்ச்சியடைந்தனர். அப்பட்டணத்தின் 104வது ஆண்டுவிழா அந்நாட்களில் நடைபெற்றன.

கட்டுரையை வாசிக்கவும்

பில்லி கிரகாம் மையத்தில் உயிர்மீட்சிக்கான உள்ளக்கதறல்

Worshipவட கரோலினா மாநிலத்தில் ஆஷ்வில் என்னுமிடத்தில் நிறுவப்பட்டுள்ள கோவ் என்ற பில்லி கிரகாம் பயிற்சி மையத்தில் அமெரிக்காமுழுவதிலிருந்தும் மற்றும் பிற நாடுகளிலிருந்தும் கிறிஸ்த்தவத்தலைவர்கள் கூடிவந்து வல்லமையான எழுப்புதலுக்காகக் கதறியழுதார்கள். போதகர்களும் கிறிஸ்த்தவத்தலைவர்களும் செய்தியாளர்களுக்கு செவிகொடுத்துக்கொண்டிருந்தபோதும் கூடி ஜெபத்தில் சமயம் செலவிட்டபோதும் தேவனுடைய ஆவியானவர் அவர்களது மத்தியில் வல்லமையாய் அசைவாடினார். சேமி டிப்பிற் ஊழிய்ங்கள் உட்பட பல அமைப்புக்கள் இணைந்து இந்த மாநாட்டை நடத்தின. வந்திருந்த தலைவர்களில் பலரும் தேவன் தங்களுடைய வாழ்க்கையிலும் ஊழியத்திலும் செய்த ஆழமான கிரியைகளைக்குறித்து சாட்சிகூறினார்கள்.

கட்டுரையை வாசிக்கவும்

இந்தியாவின் எழுப்புதலுக்கான உள்ளக்கதறல் தொலைக்காட்சி செய்திகள் சேமி டிப்பிற் ஊழியங்களால் பதிவாக்கப்பட்டுள்ளன

எழுப்புதலுக்கான உள்ளக்கதறல் தொலைக்காட்சி செய்திகள் இந்தியாவுக்காக கடந்த வாரம் சேமி டிப்பிற் ஊழியங்களின் சார்பில் பதிவு செய்யப்பட்டன. இந்தத் தொடர் செய்திகள் மே மாதம் முதல் ஒளிபரப்பாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிலுள்ள ஏராளமான மக்கள் இதனைக் கண்டு பயனடைவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆலோசனைகள் 2010 நவம்பர் மாதம் நற்செய்தி தொலைக்காட்சியோடு நடத்தப்பட்டன.

கட்டுரையை வாசிக்கவும்

சேமி டிப்பிற் ஊழியங்கள் 40 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடியது

Sammy & Texடேவ் எங்க்பிரெட் என்ற போதகர் சேமி டிப்பிற் ஊழியங்களின் நண்பர்களையும் ஆதரவாளர்களையும் பார்த்து, உங்களுக்குத் தரிசனத்தைவிடக் கூடுதல் நினைவுகள் இருக்குமேயானால், நீங்கள் உங்கள் இறுதி அத்தியாயத்தை எழுதுகிறீர்கள் என்று சொன்னார். இந்தியானா போதகரும் சேமி டிப்பிற் ஊழியங்களின் மன்றக்குழு உறுப்பினருமாகிய அவர் தொடர்ந்து, சேமி டிப்பிற்றுக்கு ஏராளம் நினைவுகள் உண்டு; ஆனால் அதைவிடக் கூடுதல் தரிசனம் உண்டு என்று அவரை அறிந்த உங்களுக்குத் தெரியுமென்றும் கூறினார். சேமி டிப்பிற் ஊழியங்கள் 40 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடியபோது, 5 நாடுகளிலிருந்தும், 15 மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த அந்த ஊழியங்களின் நண்பர்கள் கடந்த காலங்களிலுள்ள சாட்சிகளுக்கும் வருங்காலத்துக்கான அறிக்கைக்கும் செவிகொடுத்தார்கள்.

கட்டுரையை வாசிக்கவும்

இந்தியப் போதகர்கள் வாழ்க்கையின் ஓட்டத்துக்காக உயிர்ப்பிக்கப்பட்டார்கள்

இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமான தமிழ்நாட்டில் சேமி டிப்பிற் இரண்டு போதகர்கள் மாநாடு ந்டத்தினார். ஏறக்குறைய 2,000 போதகர்கள் இந்த மாநாடுகளில் பங்கேற்று தேவன் தங்களுக்குக் கொடுத்திருக்கிற ஓட்டத்தை ஓட பெலன் பெற்றுக்கொண்டார்கள். மதுரையில் நடந்த முதல் மாநாட்டில் 500 பேரும் சென்னையில் நடத்தப்பட்ட இரண்டாம் மாநாட்டில் 1,300 பேருமாக போதகர்களும் கிறிஸ்தவத் தலைவர்களும் ப்ங்கெடுத்தார்கள்.

கட்டுரையை வாசிக்கவும்

இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற அறுவடை

இந்தியாவிலுள்ள மிகச் சிறந்த பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியில் இந்த அறுவடை நடைபெற்றது. ஆனால், இம்மாநிலத்தில் நடைபெற்ற ஆவிக்குரிய அறுவடையில் இந்தப் பண்டிகை குறுக்கிடவில்லை. அமெரிக்காவிலிருந்து வந்த சுவிசேஷகனாகிய சேமி டிப்பிற் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்ததைக் கேட்க ஆயிரக்கணக்கான பஞ்சாபியர்கள் கூடிவந்தார்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும் நூற்றுக்கணக்கானோர் செய்திக்குக் கீழ்ப்படிந்தார்கள். தினமும் மாலையில் டிப்பிற் எளிய முறையில், ஆனால் வல்லைமையாக சுவிசேஷத்தைக் கூறிக்கொடுத்தார். தேவன் உங்களை நேசிக்கிறார்; உங்களைக் குறித்தும் உங்கள் குடும்பங்களைக் குறித்தும் அவருக்கு ஒரு திட்டமுண்டு. ஆனால், பாவமாகிய ஒரு பெரிய பிரச்சனை நமக்குண்டு. தேவன் பரிசுத்தமானவர்; நம்முடைய பாவம் நமக்கும் அவருக்குமிடையே பிரிவினை உண்டாக்குகிறது. ஆகவேதான் நம்முடைய பாவங்களுக்கானத் தண்டனையை எற்றுக்கொள்ள இயேசு இந்த உலகத்துக்கு வந்தார் என்று கூடிவந்தவர்களோடு டிப்பிற் கூறினார்.

கட்டுரையை வாசிக்கவும்

மத்திய கிழக்கு நாடுகளில் சீஷர்களை உருவாக்குதல்

இரண்டு வெவ்வேறு நாடுகளிலுள்ள வாலிபர்களைக் கிறிஸ்துவுக்காக ஆதாயஞ்செய்து, அவர்களை சீஷர்களாக்குவதற்காக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அழைக்கப்பட்ட வாலிப ஊழியர்களுக்கு சேமி டிப்பிட்டும் பேரி செயின்ட் கிளேயரும் கூட்டாகப் பயிற்சியளித்தார்கள். அந்நாடுகளில் ஒன்றிலுள்ள வாலிபர்கள் மத்தியில் மகாப்பெரிய எழுப்புதல் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருப்பதால், இந்தக் கூட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாயிருந்தன.

கட்டுரையை வாசிக்கவும்

காங்கோ - துயரத்தின் மத்தியில் நம்பிக்கை

திங்கள் மாலை, ஜுன் 21, 2010 - காங்கோவின் வணிக மையமான பாயின்ட் நாயிரேயிலிருந்து அந்நாட்டின் தலைநகரமாகிய பிரேசா வில்லேவுக்குச் சென்ற ரயில் இயல்பான யாத்திரையாக ஆரம்பித்தது. அந்த நாளின் பிந்திய மாலையில் மக்கள் நிரம்பிவழிந்த அந்த ரயில்வண்டி வழக்கத்துக்கதிகமான வேகத்தில் சென்றதைச் சிலர் கவனித்திருக்கலாம். ஆனால், பின்னால் நடக்கப்போகிறதை யாரும் சொப்பனத்தில்கூட எண்ணியிருக்க முடியாது. பாயின்ட் நாயிரேயிலிருந்து ஏறக்குறைய நாற்பது மைல் தூரத்தில் ரயில் ஒரு வளைவைக் கடந்தபோது, அதில் நான்கு வண்டிகள் தடம்புரண்டு ஒரு மலைச்சந்துக்கு நேராகச் சென்றன.

கட்டுரையை வாசிக்கவும்