Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

news

பிரேஸிலில் அறுவடை - 2012

BrazilFriendsஇம்பரேற்றிஸில் அறுவடை

பிரேஸில் நாட்டின் இம்பரேற்றிஸிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஒரு சிறப்பான நேரம். அது அறுவடையின் காலம். தேவனுடைய ஆவியானவரின் ஒரு அசைவாடுதல். மேய் மாதத்தில் ஸேமி டிப்பிற் நடத்திய சுவிசேஷக் கூட்டங்கள் மேற்கண்டவாறு விவரிக்கப்பட்டன. ஆர்வங்கொண்ட இருதயத்தோடு வந்த மக்களால் நிறைந்த கூட்டத்தில் ஸேமி இரண்டு இரவுகள் செய்தி கொடுத்தார்; அந்த ஆத்துமாக்கள் ஜீவ அப்பத்தின் ஆதாரத்தைக் கண்டுகொண்டனர்.

அந்தப் பட்டணத்தில் மட்டுமல்லாமல், அலகோஸ் மாநிலத்தின் தலைநகரான மாஸியோவிலும் டிப்பிற் சுவிசேஷக் கூட்டங்கள் நடத்தினார். நூற்றுக்கணக்கானோர் டிப்பிற்றின் செய்திக்குக் கீழ்ப்படிந்து, வாழ்க்கையை மாற்றக்கூடியத் தீர்மானங்களைக் கிறிஸ்துவுக்குள் செய்தார்கள். றிப்பிற் அடுத்த ஆண்டும் வரும்படித் திருச்சபைத் தலைவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அநேகரைக் கூட்டங்களுக்கு அழைத்துவர பேருந்துக்களைத் திருச்சபைகள் வாடகைக்கு எடுக்க ஸேமி டிப்பிற் ஊழியங்கள் உதவிசெய்தது. அநேகக் கிறிஸ்தவர்கள் தங்கள் ஆலயத்தில் தரித்திருந்து ஜெபித்துக்கொண்டிருக்க, கிறிஸ்துவைத் தேவைப்பட்ட அவர்களுடைய நண்பர்களும் உறவினர்களும் பேருந்துக்களில் பயணித்தனர். பேருந்துக்களில் வந்தவர்களில் ஏராளமானோர் கிறிஸ்துவுக்காகத் தங்களை அர்ப்பணித்தனர். அவர்களைப் பேருந்துகளில் ஏற்றிவந்த ஆலயங்களில் இறக்கிவிடத் திரும்பிச்செல்லும் வழியில் அர்ப்பணித்தவர்களுக்கு ஆலோசனை கொடுக்க ஆலோசகர்கள் பேருந்துக்களில் வாய்ப்பாக வைக்கப்பட்டிருந்தார்கள். திருச்சபைத் தலைவர்கள் பெரிய அறுவடையை எதிர்பார்த்திருந்தபோதிலும், அவர்கள் ஊகித்ததைவிட இது மிகவும் அதிகமாயிருந்தது.

சுவிசேஷகர்கள் பயிற்சிக்கப்பட்டு ஊழியம் பெருப்பிக்கப்பட்டது

பிரேஸில் நாட்டின் எல்லாப் பாகங்களிலிருந்தும் பன்னிரண்டு சுவிசேஷகர்கள் அந்நாட்டிலுள்ள கோயினியா என்ற இடத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பாக ஸேமி டிப்பிற்றோடு கூடிவந்திருந்தார்கள். தங்களுடைய மக்களுக்கு சுவிசேஷத்தின் தரிசனத்தையும் செயல்திட்டத்தையும் செய்தியையும் கொண்டுசெல்லும் சுவிசேஷகர்களின் ஒரு புதிய தலைமுறையை எழுப்புவதே அதன் நோக்கமாயிருந்தது. டிப்பிற் சுவிசேஷகர்களோடு ஆவிக்குரியதும் மற்றும் குடும்ப வாழ்க்கைக்குரியதைக் குறித்தும் பகிர்ந்துகொண்டார்; தேவனுக்கான இருதயம் கொண்டதும் தங்கள் முன்னுரிமை சரியாயிருப்பதுமான சுவிசேஷகர்களின் ஒரு தலைமுறையைத் தான் காண விரும்புவதாக அவர் கூறினார்.

அதோடு அந்த அமெரிக்க சுவிசேஷகர் பிரேஸில் நாட்டு சுவிசேஷகர்களுக்கு சுவிசேஷப் பணியின் கோட்பாடுகளையும் செயல்திட்டங்களையும் கற்பித்தார். ஒவ்வொடு பிரேஸிலியனும் வருகிற ஒரு ஆண்டில் அந்த செயல்திட்டத்தைக் கொண்டுநிறைவேற்றுவதாக வாக்களித்தனர். பிரேஸிலுக்கு டிப்பிற் செய்த இந்தப் பயணத்தில் அந்த சுவிசேஷகர்களில் சிலரைச் சந்தித்தார்; சுவிசேஷகர்களைப் பெருப்பிப்பதற்காக நடத்தப்பட்ட முந்தைய கூட்டத்தில் கற்றுக்கொண்டதை அவர்கள் செயல்படுத்தினார்கள் என்பதை அறிந்து டிப்பிற் பெருமகிழ்ச்சிகொண்டார்.

BrazilFriendsபிரேஸிலியாவிலுள்ள மிகப்பெரிய ஞாபக பாப்திஸ்ட் திருச்சபையின் திருப்பணி மற்றும் சுவிசேஷப்பணியின் போதகரான ஃபாரிஸியோ ஃப்ரேயிடாஸ் முந்தைய ஆண்டில் டிப்பிற் வழங்கிய தரிசனத்தைப் பிடித்துக்கொண்டார். தலைநகரைக் கிறிஸ்துவுக்காகக் கொண்டுவரும் திட்டத்தில் 94 திருச்சபைகளைச் சேர்த்துக்கொண்டார். அடுத்த மூன்று மாதங்களுக்கு 5 மக்களுக்காக ஜெபிப்பதாக வாக்குக்கொடுத்த 1000 பேர் போதகர் ஃப்ரேயிடாஸுக்கு இருந்தார்கள். ஜூன் மாதத்தில் அவர்கள் அந்த 5 மக்களோடு தங்கள் சாட்சியையும் சுவிசேஷத்தையும் பகிர்ந்துகொள்ள அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். ஜூலை மாதத்தின் இறுதியில் 94 திருச்சபைகளில் ஒவ்வொன்றும் சுவிசேஷக் கூட்டங்கள் நடத்தும். ஆயிரக்கணக்கான மக்கள் கிறிஸ்துவண்டை வரவேண்டுமென்று அவர்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தேசியத் தலைவர்களோடு போதகர் ஃப்ரேயிடாஸ் அந்தத் தரிசனத்தையும் செயல்திட்டத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார். ஸேமி டிப்பிற் ஊழியத்திடமிருந்து தான் பெற்ற பயிற்சி தேசிய செயல் திட்டமாக மாறும் என்று அவர் நம்புகிறார்.

அலகோவாஸ் மாநிலத்திலுள்ள சுவிசேஷகர்களில் ஒருவரும் இந்தச் செயல் திட்டத்தை ஒரு சிறிய பட்டணத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். கிறிஸ்துவைத் தேவைப்படும் 5 நண்பர்களுக்காகவும் சக பணியாளர்களுக்காகவும் மற்றும் உறவினர்களுக்காகவும் ஜெபிக்கும்படி விசுவாசிகளுக்குப் பயிற்சியளித்தார். அதன்பின் அவர், சுவிசேஷப் படைமுயற்சிக்காகத் திருச்சபைகளைக் கூட்டி, "இயேசு அணிவகுப்பு" மற்றும் சுவிசேஷக் கூட்டம் ஒன்றும் நடத்தி, அதில் அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.

சுவிசேஷகர்களுக்குப் பயிற்சியளிப்பதை 2013-ல் தொடரத் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.முன்பு பயிற்சி பெற்றவர்கள் இன்னொரு நிலையில் தொடர்ந்து பயிற்சி பெறுவார்கள். மேலும் புதிய சுவிசேஷகர்கள் இந்தக் குழுவுக்குள் சேர்க்கப்படுவார்கள். இந்த சுவிசேஷகர்களைக்கொண்டு தேவன் செய்கிறவைகளைக்குறித்து நான் வெகுவாய் மகிழ்ச்சியடைகிறேன்; தரிசனத்தை நிறைவேற்ற தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; பிரேஸிலிலும் இந்தியாவிலும் பயிற்சிபெற்ற சுவிசேஷகர்களுக்காகவும் ஆப்பிரிக்காவில் இந்த வேனிற்காலத்தில் பயிற்சிபெறப்போகிறவர்களுக்காகவும் ஜெபியுங்கள் என்று டிப்பிற் கூறினார்.

மேலும் படங்களுக்கு இங்கு சொடுக்கவும்.