Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

news

இந்தியாவின் எழுப்புதலுக்கான உள்ளக்கதறல் தொலைக்காட்சி செய்திகள் சேமி டிப்பிற் ஊழியங்களால் பதிவாக்கப்பட்டுள்ளன

எழுப்புதலுக்கான உள்ளக்கதறல் தொலைக்காட்சி செய்திகள் இந்தியாவுக்காக கடந்த வாரம் சேமி டிப்பிற் ஊழியங்களின் சார்பில் பதிவு செய்யப்பட்டன. இந்தத் தொடர் செய்திகள் மே மாதம் முதல் ஒளிபரப்பாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிலுள்ள ஏராளமான மக்கள் இதனைக் கண்டு பயனடைவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆலோசனைகள் 2010 நவம்பர் மாதம் நற்செய்தி தொலைக்காட்சியோடு நடத்தப்பட்டன.

பில்லி கிரகாம் பயிற்சி மையத்தில் நடைபெற்ற உயிர்மீட்சிக்கான உள்ளக்கதறல் மாநாட்டில் பேச்சாளர்கள் கொடுத்த செய்திகளே அதிகமாக இத்தொடரில் ஒளிபரப்பப்படும். வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இச்செய்திகளை இலட்சக்கணக்கான இந்தியக் கிறிஸ்தவர்கள் பார்ப்பார்களென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியக் கிறிஸ்தவர்கள் பில்லி கிரகாம் பயிற்சி மையத்திற்கு வரக்கூடாவிட்டாலும் தொலைக்காட்சி மூலமாக அந்த மாநாட்டில் பங்கெடுக்கமுடியும். அங்கு கொடுக்கப்பட்ட செய்திகளைத் தாய்மொழியில் கேட்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சேமி டிப்பிற் ஊழியங்கள் இந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் உயிர்மீட்சிக்கான உள்ளக்கதறல் மாநாடு ஒன்று நடத்த ஒழுங்குசெய்யப்பட்டுவருகிறது. நானும் மற்றும் உள்ளக்கதறல் மாநாட்டின் பிறசெய்தியாளர்களும் இந்தியாவிலுள்ள கிறிஸ்தவத் தலைவர்களுக்கு செய்தி கொடுப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஊழியத்தால் பயிற்சிபெறும் சுவிசேஷகர்கள் இந்த மாநாட்டிற்கு வந்து உயிர்மீட்சியின் தரிசனத்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாடு முடிவடைந்தபின் சேமி டிப்பிற்றும் டேவ் டிப்பிற்றும் இளம் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்க சமயம் செலவிடுவார்கள்.

உள்ளக்கதறல் செய்தியாளர்களின் செய்திகளை சிறப்பிக்கும் வாரந்தோறுமுள்ள இந்த ஒளிபரப்புக்கு சேமி டிப்பிற் பொறுப்பாயிருப்பார். அதோடு, வாழ்க்கையின் ஓட்டம் என்ற தனி நபர் உயிர்மீட்சிக்கான செய்தித்தொடர் ஒன்றை சேமி கொடுப்பார். இன்றைய தலைமுறையிலுள்ள இளம் விசுவாசிகளுக்காக டேவ் டிப்பிற் கொடுக்கும் செய்திகள் மாதத்தில் ஒருமுறை ஒளிபரப்பாகும்.