Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

news

இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற அறுவடை

இந்தியாவிலுள்ள மிகச் சிறந்த பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியில் இந்த அறுவடை நடைபெற்றது. ஆனால், இம்மாநிலத்தில் நடைபெற்ற ஆவிக்குரிய அறுவடையில் இந்தப் பண்டிகை குறுக்கிடவில்லை. அமெரிக்காவிலிருந்து வந்த சுவிசேஷகனாகிய சேமி டிப்பிற் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்ததைக் கேட்க ஆயிரக்கணக்கான பஞ்சாபியர்கள் கூடிவந்தார்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும் நூற்றுக்கணக்கானோர் செய்திக்குக் கீழ்ப்படிந்தார்கள். தினமும் மாலையில் டிப்பிற் எளிய முறையில், ஆனால் வல்லைமையாக சுவிசேஷத்தைக் கூறிக்கொடுத்தார். தேவன் உங்களை நேசிக்கிறார்; உங்களைக் குறித்தும் உங்கள் குடும்பங்களைக் குறித்தும் அவருக்கு ஒரு திட்டமுண்டு. ஆனால், பாவமாகிய ஒரு பெரிய பிரச்சனை நமக்குண்டு. தேவன் பரிசுத்தமானவர்; நம்முடைய பாவம் நமக்கும் அவருக்குமிடையே பிரிவினை உண்டாக்குகிறது. ஆகவேதான் நம்முடைய பாவங்களுக்கானத் தண்டனையை எற்றுக்கொள்ள இயேசு இந்த உலகத்துக்கு வந்தார் என்று கூடிவந்தவர்களோடு டிப்பிற் கூறினார்.

God works in Indiaசுவிசேஷ செய்தி கொடுத்தபோது ஆவியானவர் மக்களுடைய இருதயங்களில் செயல்பட்டபடியால் அவர்கள் நிசப்தமாக அமர்ந்திருந்தனர். அங்கு போடப்பட்டிருந்த பெரிய கூடாரத்தில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாக உட்கார்ந்திருந்து, நம்பிகை, விசுவாசம் மற்றும் அன்பு என்பவைகளை அறிவிக்கும் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்தார்கள். மக்கள் உன்மையாகவே பசியோடிருக்கிறார்கள்; அவர்கள் திறந்த இருதயத்தோடு வருகிறார்கள்; தேவன் அவர்களுடைய இருதயத்தைத் தம்முடைய அன்பாலும் கிருபையாலும் நிரப்புகிறாரென்று சண்டிகாரிலுள்ள முதன்மை பாப்திஸ்ட் திருச்சபையின் போதகரான மறைதிரு நாசிர் மாசி கூறினார்.

இறுதி மாலையில் அந்தப் பெரிய கூடாரத்தில் மக்களுக்கு இடம் போதவில்லை. சிலர் ஒன்றரை மணிநேரம் யாத்திரை செய்து கூட்டங்களுக்கு வந்தார்கள்; மற்றவர்கள் அருகாமையிலுள்ள கிராமங்களிலிருந்து வந்தார்கள். அந்நகரத்தின் அதிகாரிகளும் மற்றும் அரசியல் தலைவர்களும் டிப்பிற்றை வரவேற்றனர். ஆயிரக்கணக்கானோர் செய்திக்குக் கீழ்ப்படிந்து கிறிஸ்துவுக்குத் தங்கள் இருதயங்களை ஒப்புக்கொடுத்தார்கள். இங்கு எழுப்புதலின் ஆவியிருக்கிறது. தேவன் அற்புதமானவற்றைச் செய்கிறார். அவர் பெரிய ஆத்தும அறுவடையைய்க் கொடுத்திருக்கிறார் என்று ஒரு தலைமைப் போதகர் கூறினார்.

பஞ்சாபில் போதகர்கள் பயிற்சி பெற்றார்கள்:

டிப்பிற் பஞ்சாபில் சுவிசேஷக் கூட்டங்களில் பிரசங்கித்தது மட்டுமல்லாமல், ஒரு போதகர்கள் மாநாடும் நடத்தினார். ஏறகுறைய 20 இலட்சம் மக்கள் வாழுகிற அமிர்தசரசு பட்டணத்திலிருந்தும் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் தலைவர்கள் வந்தார்கள். இந்தியாவில் சீக்கியர்கள் நிறைந்த இடம் இது. அநேக சீக்கியர்கள் கிறிஸ்துவிடம் வந்துள்ளதோடு, மற்றவர்களையும் கிறிஸ்துவுக்காக ஆதயஞ் செய்கிறார்கள். சீக்கிய பின்னணியத்திலிருந்து வந்தவர்களால் அதிக அங்கத்துவம் கொண்டிருந்த முதன்மை பாப்திஸ்ட் திருச்சபையில் ஞாயிறு காலையில் டிப்பிற் செய்தி கொடுத்தார்.

தேவன் தங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு செயல்பட்டிருக்கிறார் என்று போதகர்களும் சபைத் தலைவர்களும் கூறினார்கள். நான் பல கஷ்டங்களின் வழியாய்க் கடந்து சென்றிருக்கிறேன்; நான் தேவனுடைய சமுகத்தில் காத்திருக்க வேண்டுமென்று அவர் எனக்குக் காண்பித்திருக்கிறார். அவர் என்னுடைய பெலனைப் புதுப்பிப்பார் என்று ஒரு போதகர் சொன்னார். தேவனுடைய சிங்காசனத்திலிருந்து ஒழுகுகிற தண்ணீரை நான் அனுதினமும் பருகுவது தேவை என்று இன்னொருவர் சொன்னார். கூட்டத்தின் இறுதியில் ஒரு போதகரோடு வந்த ஒருவன், எனக்கு இயேசு தேவை என்று கூறினான். டிப்பிற் அம்மனிதனைக் கிறிஸ்துவிடம் வழி நடத்தினார். புதிய பலத்தினாலும் நம்பிக்கையினாலும் போதகர்கள் நிரப்பப்பட்டார்கள். 'ஓட்டப்பந்தயத்தில் எழுப்புதல்' என்ற பொருளில் டிப்பிற் போதகர்களோடு பேசினார். எவ்வாறு சகித்துக்கொள்வதென்றும் எம்முறையில் கிறிஸ்துவின் தன்மையைக் கட்டியெழுப்புவதென்றும் அறிந்துகொள்வதற்கு இந்தச் செய்திகள் உதவியாயிருந்தன என்று அநேகர் கூறினார்கள்.

மேலும் படங்களுக்கு இங்கு சொடுக்கவும்