Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

news

மத்திய கிழக்கு நாடுகளில் சீஷர்களை உருவாக்குதல்

இரண்டு வெவ்வேறு நாடுகளிலுள்ள வாலிபர்களைக் கிறிஸ்துவுக்காக ஆதாயஞ்செய்து, அவர்களை சீஷர்களாக்குவதற்காக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அழைக்கப்பட்ட வாலிப ஊழியர்களுக்கு சேமி டிப்பிட்டும் பேரி செயின்ட் கிளேயரும் கூட்டாகப் பயிற்சியளித்தார்கள். அந்நாடுகளில் ஒன்றிலுள்ள வாலிபர்கள் மத்தியில் மகாப்பெரிய எழுப்புதல் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருப்பதால், இந்தக் கூட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாயிருந்தன.

முந்தைய ஆண்டுகளிலும் இந்த நாடுகளிலுள்ள ஊழியர்களுக்கு டிப்பிற் பயிற்சியளித்திருந்தபோதிலும் வாலிப ஊழியர்களைக் குறிப்பான இலக்காகக் கொண்டது இதுவே முதல் தடவையாகும். மேலும் செயின்ட் கிளேயர் சேமி டிப்பிற்றோடு சேர்ந்து உழைத்தது இதுவே முதல் முறையாகும். அவர் உலகம் முழுவதும் பல நாடுகளில் வாலிப ஊழியர்களுக்குப் பயிற்சியளித்துள்ளார்.

டிப்பிற்றும் செயின்ட் கிளேயரும் சீஷத்துவம் மற்றும் தலைமைத்துவம் என்பவைகளுக்குரிய கோட்பாடுகளை வாரம் முழுவதும் கற்பித்தர்கள். 'இயேசுவை மையமாகக் கொண்ட வாலிப ஊழியம்' என்ற தன்னுடைய கையேட்டின் உதவியோடு செயின்ட் கிளேயர் கற்பித்ததினால் தலைவர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. டிப்பிற்றும் சீஷத்துவத்தின் கோட்பாடுகளைக் கற்பித்ததோடு தலைவர்களைப் பார்த்து, உங்கள் நாடுகளில் தேவன் மகத்தான உயிர்மீட்சியை அனுப்பப்போகிறாரென்று நான் நம்புகிறேன். வாலிபர்கள் மத்தியில் பரிசுத்த ஆவியானவராகிய புதுத் திராட்சரசத்தை ஊற்ற அவர் விரும்புகிறார். ஆனால், புதுத் திராட்சரசத்தை ஊற்றுவதற்குப் புதுத் துருத்திகள் தேவை. அந்தப் புதுத் துருத்திகள் சீஷத்துவம் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

நாட்கள் போதவில்லையே என்று தலைவர்கள் கூறியதிலிருந்து கற்பிக்கப்பட்டவைகளைக்குறித்த அவர்களது பேரளவிலான பிரதிபலிப்பு சுட்டிக்காட்டப்பட்டது. இளைஞர்களைச் சந்திக்கும் பாரத்தோடும் ஆவலோடும் நான் இங்கு வந்தேன்; ஆனால், என்னசெய்யவேண்டுமென்று சரியாக அறியாதவனாயிருந்தேன். இப்போதோ பயன்படுத்தக்கூடிய திட்டம் எனக்கிருக்கிறது என்று பலரும் கூறினார்கள்.

Praying வாலிப ஊழியர்களோடு சேர்ந்து ஜெபிக்க அதிக நேரம் செலவிடப்பட்டது. தங்களுடைய வாழ்கையில் எழுப்புதல் ஏற்பட அநேகர் தேவனைத் தேடியதோடு, ஜெபத்தின் அடிப்படையில் தங்கள் ஊழியங்களை நிலைப்படுத்த தேவன் உதவி செய்யுமாறு வேண்டிக்கொண்டார்கள். தங்கள் சொந்த நாட்டிலுள்ள தங்களது ஊழியங்களுக்குத் திரும்பிச் செல்லும்போது ஒரு செயல்முறையை ஏற்படுத்தத் தங்கள் அணியினரோடு அதிகச் சமயம் செலவிடவும் செய்தார்கள்.

எளிய முறையில் தெளிவாகச் சாட்சி கூறுவதற்குத் தாங்கள் ஒருபோதும் பயிற்சி பெற்றிருக்கவில்லையென்று அநேக வாலிபத் தலைவர்கள் குறிப்பிட்டார்கள். எனவே, இந்தக் கூட்டத்தொடர்களில் அவ்வாறு செய்ய பயிற்சி எடுத்தார்கள். அதோடு. தங்கள் சாட்சிகளின் மூலமாக சுவிசேஷத்தை அறிவிக்கவும் அவர்கள் திட்டமிட்டார்கள். இதுவரையிலும் தாங்கள் பங்காற்றியதில் இது மிகச் சிறந்த மாநாடாய் இருந்தது என்று இக்கூட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினார்கள். இந்த வாலிப ஊழியர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் சென்று ஒரு புதிய தலைமுறை சீஷர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட ஆயத்தமானார்கள்.

சீஷத்துவமும் உயிர்மீட்சியும் - அணியை உருவாக்குதல்

சேமி டிப்பிற்றும் பேரி செயின்ட் கிளேயரும் தாங்கள் கொடுத்த பயிற்சிகளைக் குறித்து ஒருவரையொருவர் பாராட்டினார்கள். கூட்டங்களில் பங்கேற்றவர்கள் பரத்துக்கு நேராகவும் பின்பு பக்கவாட்டிலும் பார்க்கத்தக்கதாக இளைஞர்களுக்கு செயின்ட் கிளெயர் பயிற்சியளித்தார்; அவர்கள் அவ்வாறு செய்யும் படி உதவத்தக்கதாக ஜெபம். உயிர் மீட்சி மற்றும் தூய்மை என்பவைகளுக்குரிய கோட்பாடுகளை டிப்பிற் கற்றுக்கொடுத்தார்.

இளைஞர்கள் மத்தியில் பயனுள்ள ஊழியத்தைக் கட்டியெழுப்ப சமச்சீரான அணுகுமுறையைத் தாங்கள் அடைய இவர்கள் இருவரும் எவ்வாறு உதவிசெய்தார்களென்று பங்கெடுத்தோர் கூறினார்கள். ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும், அணியைக் கட்டியெழுப்புவதற்காகச் சமயம் செலவிட செயின்ட் கிளேயர் மாணவர்களை ஊக்குவித்தார். எல்லாக் கூட்டங்களிலும் ஊழியஞ்செய்யும் உத்தரவாதத்தைக் கிளேயரும் டிப்பிற்றும் சேர்ந்து பகிர்ந்து கொண்டது வந்தவர்களும் அணியாகச் செயல்படுவதற்குரிய ஒரு எடுத்துக்காட்டாயிருந்தது.

Special Prayerகூட்டங்கள் நடைபெற்ற நாட்டின் தலைநகரத்திலுள்ள ஆர்தடாக்ஸ் திருச்சபையில் ஒரு மாலை வேளையில் உயிர்மீட்சி என்ற பொருளில் டிப்பிற் செய்திகொடுத்தார். ஆராதனையின் முடிவில் மக்கள் பேரளவில் செய்திக்குக் கீழ்ப்படிந்தார்கள். அநேகர் கிறிஸ்துவுக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள்; தேவன் தங்களைக் கிறிஸ்துவைப்போல ஆக்குவதற்குத் தங்களை ஒப்புக்கோடுக்கத் திட்டமிட்டிருப்பதாகப் பலரும் பகிர்ந்து கொண்டார்கள்.

தேவனைத் தேடும் இருதயங்கொண்ட ஒரு புதிய தலமுறை இளைஞர்களைத் தேவன் எழுப்புகிறாரென்று நான் நம்புகிறேன்.

தேவனை எவ்வாறு பின்பற்ற வேண்டுமென்றும் தங்களுக்கொத்த இளைஞர்களோடு சுவிசேஷத்தை அறிவிக்க அவர் எவ்வாறு தங்களை வல்லமைப்படுத்த வேண்டுமென்றும் இந்த வாலிபர்கள் அறிந்துகொள்ள நாம் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். நாம் ஊழியத்தைப் பலமடங்காகப் பெருக்க வேண்டும். அவ்வாறு இந்த மாநாட்டில் நடைபெற்றதற்காக நான் மிகவும் மகிழ்சியடைகிறேன் என்று டிப்பிற் கூறினார்.