Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

news

தென் ஆப்பிரிக்காவில் உயிர்மீட்சிக்கான உள்ளக்கதறல்

இந்த இரவு ஒரு அற்புதத்தின் இரவு; தேவன் தம்முடைய கிருபையை நமக்குக் காண்பித்திருக்கிறார்; தம்முடைய மகிமையை அவர் நமக்குக் காண்பிக்கட்டும் என்று நான் இப்போது ஜெபிக்கிறேன் என்று சேமி டிப்பிற் தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெரிய ஆவிக்குரிய உயிர்மீட்சி உருவாகவேண்டும் என்ற ஆர்வத்தோடு அங்குள்ள ஊஸ்டர் சதுக்கத்தில் உற்சாகத்தோடு முழங்கினார். அவருடைய சத்தம் பட்டணத்தின் மத்தியிலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரம்வரையிலும் கேட்கக்கூடியதாயிருந்தது என்று கூறப்பட்டது.

அற்புதம் என்று கூறப்பட்டதற்குக் காரணமுண்டு. அதற்கு முந்தின நாள் காற்று பலமாய் வீசினது, மழை அதிகமாய்ப் பொழிந்தது. ஆனால், சேமி பேச எழும்பி நின்றபோது, மழையும் காற்றும் நின்றது; அவர் பட்டணத்தின் முக்கியமான சதுக்கத்தில் நின்று, உயிர்மீட்சியின் அறைகூவல் கொடுக்கக்கூடியதாயிருந்தது. உருளைக்கிழங்கைப்போன்ற விசுவாசம் என்ற திரைப்படத்தின் பொருளாயிருந்த அங்கஸ் பியூக்கன் என்பவர் மறுநாள் நல்ல காலநிலையில் திறந்தவெளியில் செய்திகொடுத்தார். ஞாயிற்றுக்கிழமை சேமியும் பியூக்கனும் செய்திகொடுத்தபிற்பாடு, பட்டணத்தில் மறுபடியும் மழைபெய்தது, புயல் வீசியது.

செய்திகளின் இறுதியில் சேமியும் பியூக்கனும் அழைப்புக்கொடுத்தபோது, நூற்றுக்கணக்கானோர் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து முன்வந்தனர். 2 நாளாகமம் 7:1-14 என்ற வசனங்களின் அடிப்படையில் சேமி செய்திகொடுத்தார். ருமேனியாவில் நடைபெற்ற புரட்சியை அவர் அவர்களுக்கு நினைவுபடுத்தினார். அங்குள்ள மக்கள் பத்து ஆண்டுகளுக்கு அதிகமான காலம் ஜெபித்தார்கள் என்றும் அதன் பின்னரே தேவன் அவர்களுக்குப் பதிலளித்தாரென்றும் அவர் கூறினார். ஒரு தெய்வீக நொடிப்பொழுதில் தேவனுடைய வார்த்தை நாத்தீகத்தை அந்த நாட்டிலிருந்து விரட்டிவிட்டது. ருமேனியாவின் தேவனே தென் ஆப்பிரிக்காவின் தேவன்; அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று அந்த அமெரிக்க சுவிசேஷகர் உரக்கக் கூவினார்.

பியூக்கன் மக்களை மனந்திரும்புதலுக்கும் கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்திற்கும் அழைத்தார். தென் ஆப்பிரிக்காவிலுள்ள விவசாயியான அவரை தேவன் அந்த நாட்டில் வல்லமையாய்ப் பயன்படுத்துகிறார். ஏழு ஆண்டுகளுக்குமுன் வல்லமையுள்ள மனிதர் என்ற மாநாட்டை அவர் ஆரம்பித்தார். கடந்த ஆண்டு 150,000 க்கு அதிகமானோர் அதில் பங்கெடுத்தனர். மூன்று வாரங்களுக்குமுன் அவருடைய பண்ணையில் மூன்று முதல் நாலு இலட்சம் வரையிலும் ஆண்கள் முகாமிட்டு தேவனை சேர்ந்து ஆராதித்தார்கள்.

தென் ஆப்பிரிக்காவின் உள்ளக்கதறல் மாநாட்டின் ஒரு பாகமாகத்தான் ஊஸ்டரில் வெளிக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆண்ட்ரூ முரேயின் ஊழியத்தினால் ஊஸ்டரில் ஏற்பட்ட உயிர்மீட்சியின் நூற்றைம்பதாவது ஆண்டின் நினைவுகூருதலாகவே இக்கூட்டங்கள் நடைபெற்றன. 1860 ஏப்ரல் மாதம் ஊஸ்டர் முழுவதும் தேவனுடைய காற்று பலமாய் வீசினது. அதே சதுக்கத்தில்தான் சேமியும் பியூக்கனும் பிரசங்கித்தார்கள்.

1860-ல் ஒரு ஜெபக்கூட்டத்தில் 15 வயதான ஒரு இளம்பெண் அழ ஆரம்பித்தாள். அவள் ஆண்டவரை ஆராதித்தபோது, காற்று பலமாய் அடித்து, ஊளையிட்டது; கூட்டத்திலிருந்த அனைவரும் அடக்கமுடியாதவாறு அழ ஆரம்பித்தனர். கூட்டம் கட்டுங்கடங்காமல் போகிறது என்று உணர்ந்த ஆண்ட்ரூ கூட்டத்தை முடிவுக்குக் கோண்டுவர முயற்சித்தும் கூடாமற்போயிற்று. மறுநாள் கூட்டத்திலும் அவ்வாறே நடந்தது. அக்கூட்டத்திலிருந்த ஒரு அமெரிக்க மாது முரேயைப் பார்த்து, நான் இப்போதுதான் அமெரிக்காவிலிருந்து வருகிறேன். அங்கும் இவ்வாறே நடக்கிறது. இது தேவனால் உண்டானது என்று கூறினார்கள். அப்போதுதான் ஆவியானவரின் அசைவாடுதலை முரே புரிந்துகொண்டார்; எனவே அங்குள்ள உயிர்மீட்சிக்குத் அவர் தலைமைத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்.

கடந்த வாரத்தில் நடந்த இந்த மாநாட்டில் செய்திகொடுத்த அநேகர், 1860-ல் நடைபெற்ற உயிர்மீட்சியை விவரித்தனர். செய்தியாளர்களில் சிலர் பிரிற்றோரியாவிலுள்ள பெரிய மொரிலீற்றா டச்சு சுத்தாங்கத் திருச்சபையிலுள்ள போதகர்களாவார். பியூக்கனுடைய செய்தியைத்தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவிலுள்ள பென்னி மாஸ்டெர்ட் அதே சதுக்கத்தில் வாலிபர்களோடு பேசினார். இந்த வாரம் செய்தியாளர்கள் வெவ்வேறு திருச்சபைகளுக்கு மாறிமாறி செல்வார்கள். ஞாயிறு இரவு சேமி மாண்டெக்கில் செய்தி கொடுத்தார். 1860-ல் நடைபெற்ற உயிர்மீட்சி ஊஸ்டரிலும் மாண்டேக்கிலும் ஒரே சமயம் ஏற்பட்டது. ஞாயிறு மாலையில் சேமி மாண்டேக்கில் கொடுத்த செய்திக்கு ஏராளமானோர் கீழ்ப்படிந்து, கிறிஸ்துவுக்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

சனிக்கிழமை ஊஸ்டரில் கூடிவந்த மக்களைப் பார்த்து பியூக்கன், எழுப்புதல் இங்கு வந்துவிட்டது என்று கூறினார். சில வாரங்களுக்குமுன் அவருடைய பண்ணையில் இலட்சக்கணக்கான ஆண்கள் முகாமிட்டு, தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டதையும் அவரை ஆராதித்ததையும் அவர் விளக்கிக் கூறினார். தென் ஆப்பிரிக்காவில் தேவன் நிச்சயமாகவே கிரியை செய்கிறார். தென் ஆப்பிரிக்காவுக்கான உள்ளக் கதறல் மாநாடு இம்மாதக் கடைசியில் பிரிட்டோரியாவிலுள்ள மாறிலிற்றா ஆலயத்தில் தொடர்ந்து நடைபெறும். தென் ஆப்பிரிக்காவுக்கான உள்ளக்கதறல் மாநாட்டின் இயக்குனரும் செய்தியாளர்களில் ஒருவருமான பிராங்காய்ஸ் கார் தென் ஆப்பிரிக்காவில் தேவன் சிறப்பாக செயல்படுவதைத் தான் நம்புவதாகக் கூறுகிறார். தன் நாட்டில் ஒரு வல்லமையான எழுப்புதலைக் காண அவர் வாஞ்சிக்கிறார். அபடிப்பட்ட ஒரு எழுப்புதலுக்காக அவர் அநேக ஆண்டுகள் செயல்பட்டுக்கொண்டிருந்தார்; அது நடைபெறுகிறதை அவர் காண்கிறார்.

இந்த வாரமும் அடுத்த வாரமும் நடைபெறப்போகிற கூட்டங்களுக்காக ஜெபிக்கும்படி எங்களுடைய எல்லா நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறோம். ஜொகனஸ்பர்க் மற்றும் பிரிட்டோரியா பாகங்களிலுள்ள மொறிலிற்றாவிலும் மற்ற இடங்களிலும் சேமி, பியூக்கன், கார் மற்றும் பலரும் செய்திகொடுப்பார்கள்.