Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

news

உயிர்மீட்சிக்காக பிரேசில் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு

பிரேசில் நாட்டு பாப்திஸ்ட் மாநாட்டுக்கு வந்திருந்த ஏறக்குறைய 3,000 தலைவர்களுக்கு சேமி டிப்பிற் செய்திகொடுத்தார்; அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் உயிர்மீட்சியடைய அவர்களுக்கு அவர் அழைப்புக் கொடுத்தார். மாட்டோ கிராஸோவின் தலைநகரான குயபாவில் நடைபெற்ற 90-வது வருடாந்தர மாநாட்டில் தலைவர்களோடு அவர் பேசினார்.

புற்று நோயின் மத்தியில் சேமி டிப்பிற் எவ்வாறு ஆவிக்குரிய புத்துணர்ச்சி பெற்றார் என்ற அவருடைய சொந்த அனுபவத்தை அவர் இக்கூட்டங்களில் பகிர்ந்துகொண்டபோது, பிரேசில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த தலைவர்களில் பலரும் பகிரங்கமாக அழுகிறதைக் காண முடிந்தது. டெக்ஸாஸ் மாநிலம் சான் ஆன்டோனியோவிலுள்ள இந்த சுவிசேஷகர் ஒவ்வொரு நாள் காலையிலும் மாநாட்டுக்கு வந்திருந்தவர்களோடு 'நாம் ஓடும்படி தேவன் அழைத்துள்ள ஓட்டம்' என்ற பொருளில் எபிரெய நிருபத்திலிருந்து பகிர்ந்துகொண்டார்.

பிரேசில் நாட்டுத் தலைவர்கள் செய்தியைச் சிறப்பாய் ஏற்றுக்கொண்டார்கள். அந்தத் தலைவர்களின் இருதயங்களில் தேவனுடைய கிரியை அனுதினமும் விருத்தியடைந்து வந்ததைக் காணமுடிந்தது. தேவன் தங்களோடு பேசினார் என்று உணருகிறவர்கள் எழும்பி, தேவனுக்குத் தங்களை ஒப்படைக்கும்படி திங்கள் கிழமை காலையில் டிப்பிற் கேட்டுக்கொண்டார். அங்கு வந்திருந்தவர்களில் பாதிக்கதிகமானோர் எழுந்து அவரோடு ஜெபித்தார்கள்.

தங்களுடைய ஜெப வாழ்க்கையை ஆழப்படுத்தும்படி அநேகர் ஜெபித்தார்கள்; தங்களுடைய இருதயங்களைப் புதுப்பிக்கும்படி மற்றவர்கள் ஜெபித்தார்கள். இன்று தேவன் என் ஆத்துமாவைப் புதுப்பித்திருக்கிறார், ஆகவே என் ஊழியம் உயிரடைந்திருக்கிறது என்று ஒரு போதகர் சொன்னார்.

டிப்பிற்றின் ஊழியத்தினால் பிரேசில் நாட்டில் குறிப்பாகத் தங்கள் பகுதியில் பெருகிக்கொண்டிருக்கிற கனியைய்க்குறித்து பல போதகர்கள் அவரிடம் கூறினார்கள். குற்றப் பின்னணியுள்ள ஒரு குடும்பத்தில் நான் பிறந்தேன். எனக்கிருந்த நான்கு சகோதரர்களும் கொள்ளைக்காரர்களால் கொலைசெய்யப்பட்டார்கள். அத்தகைய வருங்காலமே எனக்குரியதாயிருந்தது. ஆனால், பத்து வருடங்களுக்குமுன் உங்கள் செய்தியைக் கேட்டு என் இருதயத்தைக் கிறிஸ்துவுக்கு ஒப்படைத்தேன். அது என் வாழ்க்கையை என்றென்றைக்குமாக மாற்றிவிட்டது. பிற்காலத்தில் உங்கள் செய்தியை நான் மறுபடியும் கேட்டபோது தேவன் என்னை ஊழியத்துக்கு அழைத்தார். இப்போது நான் இறையியல் கல்லூரியில் படிக்கிறேன்; சீக்கிரம் பட்டம் பெறுவேன். இன்று உங்களுடைய செய்தியைக் கேட்டபோது தேவன் என்னை மறுபடியும் உயிர்ப்பித்திருக்கிறார் என்று ஒருவர் கூறினார்.

உங்களுடைய ஊழியத்தின் கனியால் எங்கள் பகுதி நிறைந்திருக்கிறது. உங்கள் ஊழியத்தினால் இரட்சிக்கப்பட்டவர்கள் பலர் போதகர்களாயிருக்கிறார்கள். உங்கள் ஊழியத்தினால் கிறிஸ்துவிடம் வந்தவர்கள் மிஷனெரிகளாயிருக்கிறார்கள். கனி நிலைத்திருந்து பெருகுவதைப் பார்க்க களிப்பாயிருக்கிறது என்று ஒரு பெரிய திருச்சபையின் போதகர் டிப்பிற்றிடம் கூறினார். அந்நாட்டில் மேலும் பல சுவிசேஷக் கூட்டங்கள் நடத்தத் திட்டமிடுவதற்காக அங்குள்ள தலைவர்களோடு டிப்பிற் சமயம் செலவிட்டார். நம்முடைய கூட்டங்களின்மூலம் கிறிஸ்துவிடம் வந்தவர்களால் இந்தப் பெரிய நாட்டில் இன்னும் அநேகப் போதகர்களும் அருட்பணியாளர்களும் வருகிற பல ஆண்டுகளில் உருவாகட்டும் என்று நான் ஜெபிக்கிறேன் என்று அவர் கூறினார்.