Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

news

பில்லி கிரகாம் மையத்தில் உயிர்மீட்சிக்கான உள்ளக்கதறல்

Worshipவட கரோலினா மாநிலத்தில் ஆஷ்வில் என்னுமிடத்தில் நிறுவப்பட்டுள்ள கோவ் என்ற பில்லி கிரகாம் பயிற்சி மையத்தில் அமெரிக்காமுழுவதிலிருந்தும் மற்றும் பிற நாடுகளிலிருந்தும் கிறிஸ்த்தவத்தலைவர்கள் கூடிவந்து வல்லமையான எழுப்புதலுக்காகக் கதறியழுதார்கள். போதகர்களும் கிறிஸ்த்தவத்தலைவர்களும் செய்தியாளர்களுக்கு செவிகொடுத்துக்கொண்டிருந்தபோதும் கூடி ஜெபத்தில் சமயம் செலவிட்டபோதும் தேவனுடைய ஆவியானவர் அவர்களது மத்தியில் வல்லமையாய் அசைவாடினார். சேமி டிப்பிற் ஊழிய்ங்கள் உட்பட பல அமைப்புக்கள் இணைந்து இந்த மாநாட்டை நடத்தின. வந்திருந்த தலைவர்களில் பலரும் தேவன் தங்களுடைய வாழ்க்கையிலும் ஊழியத்திலும் செய்த ஆழமான கிரியைகளைக்குறித்து சாட்சிகூறினார்கள்.

At the Altarஅநேக சாட்சிகள் ஆவியானவருடைய குறிப்பான செயல்பாடுகளைக் குறித்தவையாயிருந்தன. இரண்டு காரியங்களில் தேவன் என்னோடு பேசினார்; அவைப் பெருந்தீனியும் பிறரைக் குற்றஞ்சாட்டுவதுமே. அவை சிறிய பாவங்களாயிருந்தாலும் அவைகள் என்னைத் தேவனைவிட்டு அகற்றினவென்றும், அதால் நான் தேவனுக்கு மகிமை கொண்டுவரவில்லையென்றும் உணர்த்தப்பட்டேன். என்னுடைய உயிரற்ற சபையைக்குறித்து நம்பிக்கையற்றவனாகவும் அதற்கு ஏதேனுஞ்செய்ய வல்லமையற்றவனாகவும் உதவியற்றவனைப்போன்ற உணர்வோடு நான் இங்கு வந்தேன். ஆனால், இப்போதோ எல்லாவற்றையும் செவ்வைபண்ணுகிறவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதினால் நான் வல்லமையற்றவனல்ல என்பதையறிந்து நம்பிக்கை நிறைந்தவனாய் இங்கிருந்து செல்லுகிறேன் என்று ஒரு தலைவர் சொன்னார். முழு அர்ப்பணத்திற்குத் தேவன் என்னை அழைத்தார் என்று இன்னொருவர் சொன்னார்.

Oவார்த்தைகளால் விவரிக்கமுடியாத அளவு இந்த மாநாடுகள் ஆசீர்வாதமாயிருக்கிறபடியால் இதுபோன்ற மாநாடுகள் இன்னும் பல நடத்தலாமா என்று பங்கெடுத்தவர்களில் ஒருவர் கேட்டார். கடந்த 15 ஆண்டுகளாக சேமி டிப்பிற் ஊழியங்களும் பிற ஊழியங்களும் சேர்ந்து உயிர்மீட்சிக்கான உள்ளக்கதறல் மாநாடுகள் நடத்திவருகின்றன. நமது நாட்டிலுள்ள போதகர்கள் மற்றும் கிறிஸ்த்தவத் தலைவர்களின் இருதயங்களில் உயிர்மீட்சியின் செய்தி முக்கியப்படுத்தப்படவேண்டுமன்பதே எங்கள் விருப்பம்; நமது நாடு வல்லமையான உயிர்மீட்சியினால் பிறந்தது; நமக்கு உயிர்மீட்சியின் சிறந்த அனுபவங்களுண்டு. அடுத்தத் தலைமுறைத் தலைவர்கள் இந்த செய்தியை இருதயத்தில் கொள்வார்கள் என்பதே எங்கள் ஜெபம் என்று சேமி டிப்பிற் அமெரிக்கர்களோடு கூறினார்.

இந்த மாநாட்டுக்காக டேவ் பட்டும் (அமெரிக்க நாட்டு ஜெபக்குழுவின் தலைவர்) கிளென் ஷெப்பர்டும் (அகில உலக ஜெப ஊழியத்திற்குத் தலைவர்) ஏறக்குறைய நூறு தலைவர்களை சேர்த்து ஒரு ஆயத்த ஜெபக்கூட்டம் நடத்தினார்கள். இந்த மாநாடு ஆரம்பிக்குமுன் ஆண்களும் பெண்களும் கூடி 5 மணிநேரம் ஜெபத்தில் செலவிட்டார்கள். அங்கு வந்த மக்கள் மத்தியில் தேவன் வல்லமையான கிரியைகள் செய்யப்போகிறாரென்ற பெரிய எதிர்பார்ப்பு உண்டாயிருந்தது.

தேவனைத் தேடுவதில் அதிக அக்கறையும் ஒருமனதும் கொள்ளவேண்டுமென்று தேவன் எனக்குக் காண்பித்தார். உண்மையாகவே உயிர்மீட்சி பெற்றவனாக நான் என் திருச்சபைக்குத் திரும்பி செல்லுகிறேன் என்று ஒரு போதகர் சொன்னார். மற்றும் அனநகர் தாங்கள் பெற்ற உயிர்மீட்சியைக்குறித்துக் கூறினார்கள். இந்த மாநாடு மெய்யாகவே உயிர்மீட்சிக்கான உள்ளக்கதறலாகவே இருந்தது.

மேலும் படங்களுக்கு இங்கு சொடுக்கவும்