Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

news

உயிர்மீட்சிக்காகக் கதறியத் தலைவர்கள்

கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிற உயிர்மீட்சிக்காக உள்ளக்குமுறலின் ஏழாவது மாநாட்டிற்காகப் போதகர்களும் ஊழியத் தலைவர்களும் 'கோவ்' என்று அழைக்கப்படுகிற பில்லி கிரகாம் பயிற்சி மையத்தில் கூடிவந்தார்கள். இந்தக் கிறிஸ்தவத் தலைவர்கள் தேவனுடைய முகத்தைத் தேடியபோது, அக்கூட்டங்களில் உயிர்மீட்சியின் ஆவி பிரவாகித்தது. இந்த மாநாட்டுக்கு முன்பு டேவ் பட்ஸ் மற்றும் டேனியல் ஹெண்டர்சன் என்பவர்கள் ஒரு ஜெபக்கூடுகை ஒழுங்குசெய்திருந்தார்கள். டேவ் பட்ஸ் என்பவர் அறுவடை ஜெப ஊழியத்தின் தலைவராகவும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜெபக்குழுவின் தலைவராகவும் பணியாற்றுகிறார். டேனியல் இன்னொரு ஊழியத்தின் தலைவராயிருக்கிரார்.

இந்த மாநாட்டின் பேச்சாளர்களில் ஒருவரான மைக்கல் கேட் என்பவர் ஷெர்வுட் பாப்திஸ்ட் திருச்சபையின் போதகராகவும் 'இராட்சதர்களை எதிர்கொள்ளுதல்' மற்றும் 'நெருப்புப்பற்றாமை' என்னும் திரைப்படங்களின் முதன்மை தயாரிப்பாளருமாயிருக்கிறார். தங்கள் ஊழியத்திலுள்ள இடர்களை எதிர்கொள்ளப் போதகர்களை இவர் அறைகூவி உற்சாகப்படுத்தினார். 'நம்பிக்கையைப் பறைசாற்று' என்ற ஊழியத்தின் தலைவரான டேவிட் பிரெயன்ட் மறுநாள் மாலையில் இயேசுவின் மேன்மையைக்குறித்தும் மகிமையைக்குறித்தும் பேசினார். கிறிஸ்துவால் எழுப்பப்பட்ட இயக்கம் முற்றிலும் சாத்தியம் என்று அவர் அங்கிருந்தோரை அறிவுறுத்தினார்.

செவ்வாய்க்கிழமை பகல் கூட்டம் அம்மாநாட்டில் மிகச் சிறப்பானதாயிருந்தது. 'அகில உலக விழித்தெழுப்பும்' ஊழியத்தின் தலைவரான ரிச்சர்டு ஓவன் ராபர்ட்ஸ், போதகர்கள் தேவனுடைய வசனத்தைப் போதிக்க வேண்டுமென்று அறைகூவினார். தேவனுடைய வசனத்தைக் குறித்தோ, தேவனுடைய வசனத்திலிருந்தோ போதிக்காமல், தேவனுடைய வசனத்தையே போதிக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். போதகர்கள் தேவனுடைய வசனத்தைப் போதிக்கும்போது அவர்களுடைய செய்திகள் சம்மட்டியைப்போலவும் அக்கினி நிறைந்ததாகவும் இருக்கும் என்று அவர் கிறிஸ்தவத் தலைவர்களோடு கூறினார்.

தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜொகனஸ்பர்க்கின் அருகிலுள்ள மொரிலீற்றா என்னும் பெரிய திருச்சபையைச் சார்ந்த எல்சா மேயர் என்பவர் செவ்வாய்க் காலையில் பெண்களோடு பேசினார். 'தேவனிடம் திரும்புங்கள்' என்று தென் ஆப்பிரிக்காவில் அழைக்கப்படுகிற பெண்களுக்கான பெரிய கூடுகைகளை அவர் நடத்தி வருகிறார். அவர்களுடைய செய்தியைக் கேட்ட அநேகப் பெண்கள் அதிக ஊக்கம் பெற்றார்கள்; தேவன் அவர்களுடைய இருதயங்களைத் தொட்டார். மறுநாள் பெண்களுக்கான ஒரு கூட்டத்தில் நேன்சி லே டிமாஸ் என்பவர் டெக்ஸ் டிப்பிற் உட்பட்ட பல செய்தியாளர்களுடைய மனைவிகளோடு நேரடியாக இடைபட்டார்கள்.

இறுதிக் கூட்டத்தில் சேமி டிப்பிற் செய்தி கொடுத்தார் அமெரிக்காவில் மறக்கப்பட்டுள்ள செய்தியைக்குறித்து அவர் பேசினார் அகில உலக சுவிசேஷகனாகிய அவர் நமக்கு முன் நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடவேண்டுமேன்று தலைவர்களை அறைகூவினார். பரிசுத்த வாழ்க்கைக்குப் போதகர்களை அவர் அழைத்ததோடு, பாடுகளை அரவணைக்கவேண்டுமென்று அவர்களுக்கு அவர் கூறினார். நாம் அநுபவிக்கிற பாடுகளினால் நாம் இயேசுவைப்போல ஆக்கப்படுகிறோம்; மற்றும் பாடுகளின் பள்ளத்தாக்கில் நடந்து செல்லும்போது நாம் இயேசுவைப்போலாகிறோம். எனவே பாடுகளை அரவணைக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர் கூறினார்.

அம்மாநாட்டில் பங்கேடுத்தவர்களுடைய இருதயங்களில் தேவன் செய்த கிரியைகளைக்குறித்து பலரும் சாட்சி பகர்ந்தார்கள். அவற்றில் சிலவற்றைக் கீழே தருகிறோம்.

 

 1. கட்டுப்பாட்டைக்குறித்து தேவன் என்னோடு பேசினார் என்னுடைய தனித்தியானத்திற்கு ஒழுங்காகக் காலம் ஒதுக்க எனக்குக் கட்டுப்பாடு தேவை. நான் பிரசங்கக் குறிப்புக்களுக்காக மாத்திரம் வேதத்தை ஆராயாமல், இயேசுவைச் சந்திக்க அச்சமயத்தைப் பயன்படுத்த வேண்டும்.
 2. எவ்வாறு ஜெபிக்க வேண்டுமென்று என்னுடைய திருச்சபைக்குக் கற்றுக்கொடுக்க தேவன் என்னை உறுதிப்படுத்தினார், தேவனுடைய வசனத்தையே ஜெபிக்க வேண்டும். அவருடைய வசனம் வல்லமையுள்ளது, உயிருள்ளது.
 3. தேவனுடைய அரியணை அறைக்குள் நான் பிரவேசிக்கத்தக்கதாக தேவன் என்னை ஆசிர்வதிப்பதற்கும் அவரைக் கோண்டு என்னை நிரப்புவதற்கும் நான் யார்?
 4. நான் என்னுடைய ஊழியத்தில் தனித்தில்லையென்று தேவன் எனக்கு உறுதியளித்தார். நான் அவர்மீது என் கண்களை வைப்பதோடு, என்னைச் சீக்கிரத்தில் திசை திருப்பி அழிப்பதற்கு ஆவலாயிருக்கும் காரியங்களை நான் பார்க்கமாட்டேன்.
 5. எனக்குத் தனிப்பட்ட உயிர்மீட்சி தேவை. பசியும் தாகமும் என்னுடைய குறிக்கோள். அநேக ஆண்டுகளுக்குப்பின் இப்போது தான் அமர்ந்திருக்கக் கற்றுக்கொண்டேன்.
 6. பாவ உணர்வடைவதினாலும், இரட்சகருக்குள் தங்குவதினாலும், போஷாக்குக்கும் நீர்வளத்துக்கும் அவரைத் தேடுவதினாலும் அனுதினமும் பாவத்தை மேற்கொண்டு வெற்றியோடு ஓட்டத்தை முடிக்க நான் தீர்மானித்திருக்கிறேன். இச்சையடக்கம் மற்றும் கட்டப்பாடு என்னும் ஆவியின் கனியை என்னில் பிறப்பிக்க பரிசுத்த ஆவியானவரை நான் தாழ்மையோடு வேண்டுகிறேன்.
 7. கூறமுடியாத அநேகக் காரணங்களால் தற்போது சிலகாலம் தேவனைவிட்டு அகன்று வாழுகிறேன். ஆனால் தேவனுடைய மனிதர் தேவனுடைய வார்த்தைகளைக் கூறக் கேட்டபோது நான் உயிரடைந்திருக்கிறேன்.
 8. என்னுடைய திருச்சபையில் ஜெபத்தின் கலாச்சாரத்தை உருவாக்கவும் என்னுடைய சொந்த ஜெப வாழ்க்கையை ஆழப்படுத்தவும் தேவன் எனக்கு ஒரு புதிய பாரத்தைக் கொடுத்திருக்கிறார்.
 9. அவரோடு இன்னும் அதிகம் நேருங்கி வாழ தேவன் என்னை அழைத்திருக்கிறார். அவர் என் ஆத்துமாவைப் புதுப்பித்ததோடு, என்னுடைய ஊழியத்தைக்குறித்த ஒரு புதிய தரிசனத்தையும் எனக்குக் கொடுத்திருக்கிறார்.
 10. அவரோடு புத்துணர்ச்சி பெற தேவன் என்னை மறுபடியும் அழைத்திருக்கிறார். ஒரு காலகட்டம் வரையிலும் கடினமாக ஊழியஞ்செய்தபின், வழியில் நான் சுயத்துக்கு இடங்கொடுத்தபடியால், சீக்கிரமாய் சோர்ந்து போனதைத் தேளிவாகக் காணும்படி தேவன் எனக்கு உதவி செய்தார்.
 11. தற்போது நான் பல திருச்சபைகளில் தற்காலிகப் போதகராகப் பணியாற்றி வருகிறேன். இங்குக் கற்றுக்கொள்கிறவைகளை என்னால் செயல்படுத்த முடியுமா என்கிற ஐயப்பாட்டினால் இங்கு வருவதைக்குறித்துத் திகைப்புக் கொண்டிருந்தேன். இந்த முறை நான் முற்றிலும் சுயநலமுள்ளவனாயிருந்தேன் என்பதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த மாநாடு எனக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று நான் உணருகிறேன். இங்கு வாழிகாட்டுதல், நம்பிக்கை, தைரியம், விசுவாசம், தரிசனம், சமாதானம் போன்றவற்றை நான் பெற்றுக்கொண்டேன்.
 12. என்னுடைய தனித்தாள் உயிர்மீட்சி, ஜெபம், வேத தியானம் போன்றவற்றில் கருத்தைச் செலுத்த தேவன் எனக்குக் காண்பித்தார். இந்த வாரம் நான் கேட்டவைகளின் அடிப்படையில் என் ஊழியத்தைத் திருத்தியமைக்க இது எனக்கு உதவியது. இது என்னை இயேசுவுக்கு மிக அருகாமையில் கொண்டு வந்தது.
 13. முழுநேர ஊழியத்தில் பிரவேசிக்க என் இருதயத்திலிருந்த ஆவலை இந்த மாநாடு உறுதிப்படுத்தியது. 2011 கல்வியாண்டில் நான் கிறிஸ்தவ அறிவுரைக்குரிய உளநூலில் இளங்கலைப் பட்டம் பெறுவேன். அதன்பின்பு தேவனைக் குறித்த ஆர்வத்தை பிறரில் உருவாக்க உதவுவதே என் விருப்பம்.
 14. அதிகமாக ஜெபிப்பதும் கூடுதல் அவர் முகத்தைத் தேடுவதும் எனக்கு மிகவும் தேவை என்று தேவன் எனக்குக் கண்பித்தார். மெலும் இயேசுவை அதிகமதிகமாக நோக்கிப் பார்க்க என் சபையாரை நான் வழிநடத்த வேண்டும்.
 15. என் ஜெப வாழ்க்கையில் அதிகக் கவனம் தேவை. "முதலில் சுடு பின்பு கேள்வி கேள்" என்கிற அனுபவத்திலிருந்து "இப்போது ஜெபி பின்பு கீழ்ப்படி" என்கிற அனுபவத்திற்குப் பரிசுத்த ஆவியானவருடைய ஒத்தாசையோடு செல்லுவேன் என்று நான் நம்புகிறேன்.
 16. என்னுடைய ஊழியத்தைத் தேவன் உறுதிப்படுத்தினார். தடைகளும் சோர்வுகளும் வந்தாலும் உண்மையாயிருக்க என்னை அவர் உற்சாகப்படுத்தினார். என்னுடைய வருங்கால ஊழியத்தைக்குறித்த என்னுடைய ஜெபத்திற்கு அவர் பதிலளித்திருக்கிறார்.