Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

news

அமெரிக்காவை அதன் எழுப்புதலின் அடிப்ப்டைக்கு அழைத்தல்

தற்போதைய அகில உலகப் பொருளாதார நெருக்கடி ஆவிக்குரிய உயிர்மீட்சியின் ஒரு தீப்பொறியை உருவாக்கியிருக்கிறது, ஆனால் அது உயிர்மீட்சியாகாது என்று சேமி டிப்பிற் திருப்பணி வ்லைப்பின்னல் செய்திகளுக்கு அண்மையில் கூறினார். மக்கள் நம்பிக்கையை இழந்துகொண்டேவருகிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் கருத்தைக்குறிததுக் கேள்விகேட்கிறார்கள்; உலகப்பிரகாரமான உடமைகளை சம்பாதிப்பதைவிடக் கூடுதலாக வாழ்க்கைக்கு ஏதாவது உண்டா என வியக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுதான் அந்தத் தீப்பொறி. ஆனால், அந்தத் தீப்பொறி உயிர்மீட்சியாக மாற அவர்களுடைய இருதயங்களினூடே தேவனுடைய காற்று வீசவேண்டுமென்பதே நமது தேவை என்றும் அவர் கூறினார்.

கடந்த சில வாரங்களாக டிப்பிற் அமெரிக்காவின் பல பாகங்களிலும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒரு ஆவிக்குரிய உயிர்மீட்சியின் தேவையை வலியுறுத்திக்கொண்டே திரிந்தார். ஸான் அந்தோணியாவிலுள்ள அந்த சுவிசேஷகர் அவருடைய சொந்தப் பட்டணத்தில் மட்டுமின்றி, இண்டியானாவிலும் மிஸிஸிப்பியிலும் றென்னஸியிலும் செய்திகொடுத்தார். அவர் பேசின எல்லாத் திருச்சபைகளிலும் அவருடைய செய்தி சிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மிஸிஸிப்பியில் ஜாக்ஸனுக்கு அருகாமையிலுள்ள பைரம் என்னுமிடத்தில் டிப்பிற் ஊழியம் செய்தார். ஒவ்வொரு இரவும் கூட்டம் அதிகரித்துக்கொண்டேவந்தது; பரிசுத்த ஆவியானவருடைய பிரசன்னம் எல்லாத் தொழுகைகளிலும் ஊடுருவியது. கூட்டத்தின் முடிவில் அநேக மக்கள் பீடத்தின் அருகாமையில் வந்து, தேவனோடுள்ள அவர்களுடைய வாழ்க்கையில் உயிர்மீட்சி உருவாகும்படித் தேவனைத் தேடினார்கள்.

டிப்பிற் இந்தியானாவிலுள்ள நப்பனீ என்னுமிடத்திற்கு சென்று, அங்குள்ள மிஷனரித் திருச்சபையில் செய்திகொடுத்தார். அந்தப் பெரிய திருச்சபையின் போதகராயிருக்கிற டேவ் எங்க்ப்ரெட் என்பவர் சேமி டிப்பிற் ஊழியங்களுடைய பணிப்பாளர் சபையில் சேவைசெய்கிறார். டிப்பிற் தொடர்ந்து பேசிய மூன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனைகளிலும் மக்கள் திரளாக அழைப்புக்குக் கீழ்ப்படிந்தார்கள். செய்தியின் முடிவில் பீடம் மக்களால் நிரம்பியது. தாங்கள் அழைக்கப்பட்ட வாழ்க்கையின் ஓட்டத்தை ஓடி முடிக்கத்தக்கதாகத் தேவன் தங்களுடைய இருதயங்களைப் புதுப்பிக்கும்படி அநேகர் கண்ணீரோடு தேவனிடத்தில் வேண்டுதல் செய்தார்கள்.

வாழ்க்கையில் ஒரு ஓட்டத்தை ஓடும்படி தேவன் நம்மை அழைத்திருக்கிறார்; அதன் இறுதி இலக்கு கிறிஸ்துவைப்போன்ற தன்மையடைவதே; நாம் வெற்றி வீரர்களாகவேண்டுமேயானால், வழி எங்கும் ஆவிக்குரிய புத்துண்ர்வு நமக்குத் தேவை என்று டிப்பிற் அவையோரிடம் கூறினார். கிரேக்க மாரத்தானுக்காக அவர் பயிற்சி மேற்கொண்டபோது அவ்ர் கற்றுக்கொண்ட உண்மைகளினூடே உயிர்மீட்சியின் தேவையை அவர் விளக்கிச்சொன்னார். அந்த செய்தி தங்களுக்கே கூறப்பட்டதாக அநேக மக்கள் அறிக்கையிட்டதோடு, ஆவிக்குரிய புத்துணர்வு தங்களுக்குத் தேவை என்றும் வெளிப்படுத்தினார்கள்.

மிஸிஸிப்பியில் கொடுக்கப்பட்ட செய்திக்கு அநேக வாலிபர்கள் கீழ்ப்படிந்தார்கள். அது எனக்குப் பெரிய உற்சாகமாயிருந்தது; 62 வயதான ஒருவருக்கு வாலிபர்கள் செவிகொடுப்பார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை; ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ததோடு, அநேகர் தங்கள் வாழ்க்கையைக் கிறிஸ்துவுக்கு ஒப்படைத்தார்கள் என்று டிப்பிற் சொன்னார்.

கிறிஸ்துவுக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த வாலிபர்களில் ஒரு பெண் மற்றும் அநேகரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர கருவியாயிருந்தாள். அவள் ஒவ்வொரு மாலை ஆராதனைக்கும் தன் நண்பர்களில் ஒருவரை அழைத்துவந்தாள்; அந்த நண்பர்கள் கிறிஸ்துவுக்குத் தங்கள் இருதயங்களைக் ஒப்புக்கொடுத்தார்கள். அவளோடு யாரும் வராத ஒரு இரவில் தேவன் அவளுடைய இருதயத்தில் ஆழமாகக் கிரியைசெய்தார்; அவ்ளுடைய குடும்பத்தில் ஒருவரையொருவர் மன்னித்து, ஒருவரோடொருவர் ஒப்புரவாகும்படிச்செய்தார்.

அமெரிக்காவில் அதிக காலம் செலவிட்டு, உயிர்மீட்சியின் செய்தியைக் கிறிஸ்தவர்களுக்குக் கொண்டுவரத் தாம் நம்புவதாக டிப்பிற் கூறினார். அமெரிக்காவின் பல ப்குதிகளிலும் சாட்டனூகா ம்ற்றும் றென்னஸி போன்ற இடங்களிலும் அவர் செய்திகொடுத்ததோடு தன்னுடைய ஆகஸ்ற் மாத ஊழியத்தை முடித்துக்கொண்டார். றென்னஸியில் ஹாரிஸன் என்னுமிடத்தில் பேஸைட் பாப்திஸ்ட் ஆலயத்தில் அவர் செய்திகொடுத்தார். இரண்டு ஞாயிறு காலை ஆராதனைகளில் அவர் செய்திகொடுத்தபின் ஞாயிறு மாலையில் பிரசங்கித்தார்; தேவனுடைய வார்த்தையைக் கேட்க ஆர்வத்தொடு வ்ந்த மக்களால் ஆலயம் நிரம்பிவழிந்தது. அநேகர் செய்திக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

ஒரு பெரிய ஆவிக்குரிய விழிப்புணர்ச்சிக்காக ஜெபிக்கும்படி அமெரிக்காவுக்குத் தொடர்ந்து அழைப்புக் கொடுத்துக்கொண்டிருக்கிற சேமி டிப்பிற்றுக்காக ஜெபியுங்கள்.