Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

Sammy's Blog

முதியோருக்கான உலக ஓட்டப்பந்தயத்தில் கடந்த வாரம் நான் 400 மற்றும் 800 மீட்டர் தூரம் ஓடினேன், அது எனக்கு அதிக சுவாரசியமான அனுபவமாயிருந்ததோடு, ஓட்டத்தைக்குறித்தும் வாழ்க்கையைக்குறித்தும் தொடர்பாக அதிகம் கற்றுக்கொண்டேன். நான் கற்றுக்கொண்டவைகளில் மிகவும் முக்கியமான ஒரு பாடம், என்னுடைய ஓட்டத்திலிருந்து அல்ல, நான் ஓடியதற்கு நேர் முந்தைய 400 மீட்டர் ஓட்டத்திலிருந்து எனக்குக் கிடைத்தது. 65-69 வயதுக்குட்பட்டவர்களில் சில சிறந்த ஓட்டப்பந்தய வீரர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் அமெரிக்காவில் அந்த வயது வரம்பிலுள்ளவர்களில் 400 மீட்டர் தூரத்துக்கான தற்கால சாதனையாளராவார்.

65 வயதான அந்த சாதனையாளர் ஓடுகிறதை நான் அதிக எதிர்ப்பார்ப்போடு கவனித்துக்கொண்டிருந்தேன்; நான் ஏமாற்றமடையவில்லை. அவர் மற்றவர்களைவிட நிதானமாகப் புறப்பட்டு, 400 மீட்டரும் நான் இதுவரையிலும் கண்டிராத அளவு மிகவும் அற்புதமாக ஓடினார். அவருடைய ஓட்ட நிலையில் எந்தத் தவறும் காணப்படவில்லை. அவருடைய வேகம் மற்ற எல்லாருக்கும் முன்னால் அவரை உந்தித்தள்ளியது. அவர் ஓடியதை நான் மிகவும் வியப்போடு பார்த்துக்கொண்டு நின்றேன். அவர் தன்னுடைய முந்தைய சாதனையை முறியடித்தார்.


> கூடுதலாக வாசிக்கவும்
Bookmark and Share
ஆராய்ச்சி செய்யவும்
யார் பேசுகிறாரென்பதைப் பாருங்கள்
அதிகப் பாராட்டுக்கள் பெற்ற எங்களது கட்டுரையின் ஒரு கண்ணோட்டம்
Tags