Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

Sammy's Blog

கடந்த ஆநேக வாரங்களாக ஏன்னுடைய ஃட்டத்தைக் குறித்து நீங்கள் ஆதிகம் கேள்விபடாததின் காரணம் ஏன்னுடைய ஃட்டம் நின்று போனதே நான் சோம்பற்பட்டு விட்டேனென்றோ ஃட்டத்தை நிறுத்தி விட்டேனென்றோ ஏண்ணாதீர்கள். ஐறக்குறைய பத்து வாரங்களுக்கு முன் ஏன் முழங்கால் காயப்பட்டுவிட்டபடியால் நான் ஃடுவது ஈயலாமற் போயிற்று..

இயினும் நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கையின் ஈறையியல் கோட்பாடுகளை கற்றுக்கொள்ளும் ஓரு ஆனுபவமாக நான் ஃட்டத்தை ஆணுகியுள்ளேன். காயப்பட்ட முழங்காலைக் குறித்து வேதத்திலிருந்து ஏன்ன கற்றுக்கொள்ளமுடியுமென்று நீங்கள் வியப்படையலாம். ஐராளம் கற்றுக் கொள்ள முடியும்.


> கூடுதலாக வாசிக்கவும்
Bookmark and Share

வழக்கமாக நான் எழுதுகிற வலைப்பதிவு செய்திகளை இந்த வாரம் தவிர்க்கிறேன். ஒரு வாரகாலமாக நடைபெற்ற மாநாடு தற்போது முடிவடைந்துள்ளது. அங்கு பங்கு பெற்றவர்களை உற்சாகப்படுத்த கீழ்க்கண்ட வார்த்தைகளை நான் அவர்களுக்கு எழுதி அனுப்பினேன் இதை வாசிப்பது உங்களுக்கும் ஆசீர்வாதமாயிருக்குமென்று நான் எண்ணுகிறேன். எனவே, கீழ்க்கண்ட அறைகூவலைத் தயவாய் வாசிக்கவும்.

உயிர்மீட்சிக்கான உள்ளக்குமுறல் மாநாடு முடிவடைந்துவிட்டது; தேவன் நம்மோடு இடைபட்டார். வார்த்தையின்படியும் ஆவிக்குரிய நிலையிலும் நாம் ஒரு மலையுச்சியின் அனுபவத்தைப் பெற்றோம். நாம் வட கரோலினாவின் மலைகளைவிட்டு இறங்கிவிட்டோம், பள்ளத்தாக்கில் வாழ்க்கையின் நிஜங்களைச் சந்திக்கிறோம். ஊழியத்தின் பாடுகள், திருச்சபை உத்தரவாதங்கள் மற்றும் ஏராளம் கடமைகள் நமக்காகக் காத்திருக்கின்றன.


> கூடுதலாக வாசிக்கவும்
Bookmark and Share

கடந்த வார இறுதியில் டெகஸாஸ் மாநில முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஓடும்படியான ஒரு அற்புதமான அனுபவம் எனக்குக் கிடைத்தது. காலநிலை மிகவும் நன்றாயிருந்தது. வானம் தெளிவாயிருந்தது, குறைவான காற்று வீசிற்று, வெப்பம் 68 பாகையாயிருந்தது. ஆயினும், கடந்த சில வாரங்களாக நான் ஆஸ்த்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததுதான் எனக்குச் சற்றுக் கவலையளித்தது. நான் என்னுடைய முழுத் திறமையோடும் ஓடுவேன்; நடக்கிறது நடக்கட்டும் என்று ஓடுமுன் நான் ஒரு நண்பனிடம் கூறினேன். ஊழியத்திலும் அதே மனப்பான்மைதான் எனக்கிருக்கிறது. என்னுடைய முழு முயற்சியோடு செயல்படுவதுதான் என்னுடைய பங்கு; மற்றது தேவனுடைய கரத்தில். என்னுடைய சேய்திக்குப்பின் அநேக மக்கள் அழைப்புக்குக் கீழ்ப்படிவார்களானால் அது அற்புதமானதே. ஆனால், நான் என்னுடைய திறமைக்கொத்துச் செயல்பட்டுவிட்டு பலனுக்காகத் தேவனையே நம்பி இருப்பேனேயானால், நான் அழைப்புக் கொடுக்கும்போது வெகு சிலரே முன் வந்தாலுஞ்சரி அல்லது யாரும் வராமலிருந்தாலுஞ்சரி அதுவும் அற்புதமானதே.

400 மீட்டர் தூரத்திற்கு ஓட ஆரம்பித்த போது, நான் சற்று பதட்டத்தோடிருந்தேன். அந்த வட்டாரத்தில் நான் ஒரு புதியவன். என்னுடைய வயது வரம்பில் என்னோடு ஓடியவர்கள் அனுபவசாலிகள்.


> கூடுதலாக வாசிக்கவும்
Bookmark and Share

'சும்மா செய்துவிடு' என்பது விளையாட்டு வீரர்களுக்குக் காலணிகள் தயாரிக்கும் புகழ்பெற்ற ஒரு குழுமத்தின் சின்னமாகும். ஆனால், விளையாட்டு வீரர்களுக்கு இது வெறும் சின்னத்தைவிட பல வேளைகளில் கூடுதல் பொருளுள்ளதாகிறது. இது அவர்களுடைய வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது; லைபீரியாவில் இந்த வாரம் இது உண்மை எனக் கண்டேன். நாங்கள் இந்த நாட்டுக்கு வந்ததுமுதல் இன்றுவரை ஒவ்வொரு நாளும் மழை பெய்தது. போரினால் பாதிக்கப்பட்ட இந்த நாட்டில் ஓட்டப்பயிற்சி எடுப்பது இந்தக் காலநிலையினால் இயலாததாயிற்று.

ஓடுவதற்கு வசதியான இடங்கள் அதிகமில்லை. அதோடு தினந்தோறும் மழைபெய்ததினால், கூட்டங்களின் நெருக்கடியில் ஓடுவது கூடாததாயிற்று. எனவே, மழை நிற்கிற வேளைகளில் ஓடவேண்டும் என்று தீர்மானித்தேன். சொல்லப்போனால், ஓடுவதற்குத் தகுதியான ஒரே இடம் நான் தங்கியிருந்த விடுதிக்கு முன்பக்கமுள்ள தெரு மாத்திரமே.


> கூடுதலாக வாசிக்கவும்
Bookmark and Share
ஆராய்ச்சி செய்யவும்
யார் பேசுகிறாரென்பதைப் பாருங்கள்
அதிகப் பாராட்டுக்கள் பெற்ற எங்களது கட்டுரையின் ஒரு கண்ணோட்டம்
Tags