Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

Sammy's Blog

உன்னுடைய பந்தய ஓட்டம் என்ன?

ஓட்டப்பந்தயம் என்னும் என்னுடைய புத்தகத்துக்காக ரயன் ஹாலை நான் பேட்டிகண்டபோது கல்லூரியில் ஓடிய ஒரு மைல் தூரத்தை நிறுத்திவிட்டு, நீண்ட தூரம் ஓட ஆரம்பித்ததின் காரணம் என்ன என்று நான் அவரைக் கேட்டேன். அதற்கு அவர் கொடுத்த பதில் கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் ஓட்டத்துக்குமான சில முக்கிய கோட்பாடுகளை வெளிப்படுத்தியது.

அவர் இளைஞனாயிருந்தபோது, ஒரு மைல் தூரம் ஓடுவதிலேயே தன் சிந்தையை செலுத்தியிருந்தார் என்று அவர் முதலில் என்னிடம் கூறினார். அந்த ஓட்டத்தில் உலகத்திலேயே மிகச்சிறந்த வீரனாயிருக்கவேண்டுமென்று அவர் கனவுகண்டார். கல்லூரியில் அவர் சந்தித்த பல விரக்திகள் மற்றும் தோல்விகளுக்குப்பின், தேவன் தன்னுடைய ஓட்டத்தைக்குறித்துக் கொண்டிருக்கிற நோக்கத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். சரிதான் ஆண்டவரே, நான் எத்தகைய ஓட்டத்தில் ஓடவேண்டுமென்று நீர் தீர்மானித்தாலும் நான் அதைக்குறித்துக் கவலைப்படவில்லை; நீர் என்னை எதற்காகப் படைத்திருக்கிறீரோ அதைமாத்திரமே செய்ய நான் விரும்புகிறேன் என்று தேவனிடம் அவர் கூறினார்.

அந்த ஜெபத்திற்குப்பிறகு, ரயன் நீண்டதூர ஓட்டப்பந்தயங்களில் ஓட முயற்சிசெய்தார்; அது அவருக்கு மிகவும் இயல்பாய் அமைந்திருந்தது. இதற்கு முன்னமேயே நான் இதைக்குறித்து சிந்தித்திருந்தால் நலமாயிருந்திருக்குமே என்று அவர் பின்னால் எண்ணீனார். அவர் மிக விரைவாக ஓடியதுமட்டுமல்லாது, அரை மாரத்தானை ஒரு மணிநேரத்துக்குள்ளாக ஓடிய முதல் அமெரிக்கன் அவரே; மேலும் சமீக காலத்தில் மாரத்தான் ஓடிய அமெரிக்கர்களில் அவரே மிகவும் வேகமாக ஓடினார். தன்னுடைய ஓட்டம் எது என்பதை ரயன் கண்டுகொண்டபோது, அவர் முந்தைய சாதனைகளையெல்லாம் முறியடித்தார்.

பிறருடைய நன்மதிப்பைப் பெறவேண்டுமென்பதற்காக சில காரியங்களை செய்ய அடிக்கடி நாம் விரும்புகிறொம். அல்லது, நம்முடைய சொந்தத்தில் நமது மிகச்சிறந்த ஆற்றலின் உச்சத்தை அடையலாமென்று எண்ணுகிறோம். ஆனால், ரயன் செய்ததுபோல நாமும் தேவனுடைய திட்டத்துக்கு நம்முடைய கரத்தையும் இருதயத்தையும் திறக்கும்போது, நாம் நம்முடைய முழு ஆற்றலோடும் ஓடமுடியும். ஆண்டவரே உம்முடைய திட்டத்தை எனக்குக் காண்பியும் என்று நாம் சொல்லும்பொழுதுமாத்திரமே ஓட்டம் இயல்பாக அமையும். யதார்த்தத்தில் அது தெய்வீகமான இயற்கையாயிருக்கும்.

உங்கள் இருதயத்தைத் திறந்து, வாழ்க்கையில் நீங்கள் ஓடுவதற்காகத் தேவன் நியமித்திருக்கிற ஓட்டத்தை அவர் உங்களுக்குக் காண்பிக்கும்படி அவரிடம் கேளுங்கள்.அப்போது ஒரு வெற்றி வீரனைப்போல நீங்களும் ஓடுவீர்கள்.

Bookmark and Share
0 விளக்கக் குறிப்புகள்
உங்கள் கருத்துக் குறிப்பை விட்டுவிடவும்
பெயர்:

*
உங்கள் மின் அஞ்சல்:

உங்கள் இணையதளம்:

செய்தி:

கீழேயுள்ள படிமத்தில் குறியீட்டைப் புகுத்தவும்

ஆராய்ச்சி செய்யவும்
யார் பேசுகிறாரென்பதைப் பாருங்கள்
அதிகப் பாராட்டுக்கள் பெற்ற எங்களது கட்டுரையின் ஒரு கண்ணோட்டம்
Tags