Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

Sammy's Blog

தேவனுடைய ஒரு தானம்?

ஒரு மணிநேரத்துக்குள் அரை மாரத்தான் ஓடிமுடித்த ஒரே அமெரிக்கன் ரயன் ஹால். இந்த வாரம் மாரத்தான் ஓடிய எல்லா அமெரிக்கர்களிலும் இவர்தான் மிகவும் வேகமாக் ஓடி குறிப்பிட்ட தூரத்தை 2:04:58 மணி நேரத்தில் கடந்தார். ஆச்சரியம்! 26.2 மைல்களை 2 மணிநேரம் 5 நிமிடத்துக்குள் ஓடினார். அதாவது, ஒரு மையிலுக்கு 4 நிமிடம் 46 வினாடிகள் வேகத்தில் 26 மைல்களுக்குக் கூடுதலாக ஓடினார். ஆனால், அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் ஓடும்போதுள்ள அவருடைய் மனப்பான்மையே.

முந்தைய ஆண்டில் அவ ர் பாஸ்ற்றன் மாரத்தான் ஓடியபிறகே ஓட்டப்பந்தயம் என்னும் என்னுடைய புத்தகத்திற்காக நான் அவரை நேர்காணல் நடத்தினேன். அவர் என்னிடம், நான் ஓடிக்கொண்டிருக்கும்போது, கடினமான அனுபவங்களைக் கடக்கநேரிட்டால், தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கவேண்டும் என்று மாத்திரமே நான் ஜெபிப்பேன். அத்தகைய கடினமான நேரங்களில் அவரோடு தொடர்புகொள்ளும் வழிமுறைகளைக் கண்டறிய நான் விரும்புவேன்; ஏனெனில், அவருடைய பிரசன்னத்தில் இருக்கும்போதெல்லாம் நான் எப்போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறென். அவரோடு தொடர்புகொள்வதும் அவருடைய சமுகத்திலிருப்பதுமே மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள சிறந்தவழி என்று கூறினார்.

திங்கட்கிழமை அவர் ஓடின பாஸ்ற்றன் மாரத்தான் மிகவும் அற்புதமாயிருந்தது என்று அவர் சொன்னார்; ஏனெனில், அந்த ஓட்டத்தில் இதற்குமுன் ஓடிய எல்லாரையும்விட அவர் அதிக வேகத்தில் ஓடினார். ஆயினும் அந்த ஓட்டத்தில் முதலாவது வந்த நபர் இவர் கண்ணுக்கெட்டாதபடி அவ்வளவு முந்தி ஓடினார். அவ்வாறு ஓடி ஜெயித்தவர் கென்யா நாட்டைஸ் சார்ந்த் ஜாஃப்ரே மூட்டாய் என்பவராவார்; அவர் 26.2 மைல் தூரத்தை இதுவரையிலும் யாரும் ஓடாத வேகத்தில் ஓடி, 1:03:02 மணிநேரத்தில் நிறைவுசெய்தார். இத்தகைய சரித்திரப் புகழ்பெற்ற ஓட்டத்தை ஓடிமுடித்தபின், அவர் சொன்னதாவது: இதை நான் தேவனுடைய தானமாகப் பார்க்கிறேன்; இதைவிடக் கூடுதல் கூற எனக்கு வார்த்தைகள் இல்லை என்பதே.

ஹாலும் மூட்டாயும் ஓட்டத்துக்கான தங்களுடைய திறமைகளைத் தேவனுடைய தானமாகவே காண்கிறார்கள். நான் ஹாலை நேர்கண்டபோது, நீங்கள் ஏன் ஓடுகிறீர்களென்று அவரைக் கேட்டேன். அதற்குப் பிரதியுத்திரமாக அவர், தேவன் எனக்கு ஒரு தானம் கொடுத்திருக்கிறார் என்று நான் உணருகிறேன்; அந்த ஈவு பிறருக்கு உதவிசெய்யப் பயன்படுத்தப்படவேண்டும். அதை நிறைவேற்றவே நான் ஓடுகிறேன். அதைப் பின்பற்றுவதில் நான் வாழ்க்கையின் முழுமையையும் மகிழ்ச்சியின் நிறைவையும் காண்கிறேன் என்று கூறினார்.

ஹாலுக்கும் மூட்டாய்க்கும் பொதுவான் ஒன்று உண்டு. அவர்கள் இருவரும் திங்கள்கிழமை ஓடின ஓட்டத்தில் முன்புள்ள சாதனையை முறியடித்தபோதிலும், தங்களுடைய திறமைகள் தேவனுடைய தானமாகவே காண்கிறார்கள். வாழ்க்கையின் வீரர்கள் தங்களது ஆற்றல்கள் தேவனுடைய தானங்கள் என்று உணர்வதோடு, அவற்றைத் தேவனுடைய மகிமைக்கேதுவாகப் பயன்படுத்துகிறார்கள். ஹாலும் மூட்டாயும் மாரத்தான் வீரர்கள் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் வீரர்களே.

Bookmark and Share
0 விளக்கக் குறிப்புகள்
உங்கள் கருத்துக் குறிப்பை விட்டுவிடவும்
பெயர்:

*
உங்கள் மின் அஞ்சல்:

உங்கள் இணையதளம்:

செய்தி:

கீழேயுள்ள படிமத்தில் குறியீட்டைப் புகுத்தவும்

ஆராய்ச்சி செய்யவும்
யார் பேசுகிறாரென்பதைப் பாருங்கள்
அதிகப் பாராட்டுக்கள் பெற்ற எங்களது கட்டுரையின் ஒரு கண்ணோட்டம்
Tags