Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

Sammy's Blog

சகிப்புத்தன்மையை ஏன் கட்டியெ

புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையை செய்யுமுன் நான் இடையைக் குறைக்கவேண்டுமென்றும், சகிக்கும் சக்தியைக் கூட்டவேண்டுமென்றும் மருத்துவர் என்னிடம் சொன்னபோது இந்த இரு காரியங்களையும் செய்வதற்குரிய ஒரே வழி ஓடுவது என்பதை நான் உண்ர்ந்தேன். அப்போதுதான் இந்த வியக்கத்தக்க முயற்சி ஆரம்பித்தது. ஓட்டத்துக்குரிய கொள்கைகளுக்கும் வேதத்தின் உண்மைகளுக்குமிடையேயுள்ள தொடர்பை அப்பொழுது நான் கண்டுபிடித்தேன்.

மருத்துவர் பயன்படுத்திய முக்கிய வார்த்தை சகித்தல் என்பதே. சிகிச்சைக்குப்பின் பூரண ஆரோக்கியமடைய இது மிகவும் உதவியாயிருக்கும் என்று அவர் சொன்னார். அவர் சொன்னது சரியே. மிகவும் நல்ல முறையில் நான் ஆரோக்கியமடைந்தேன்.

அதேவேளையில் தாங்கும் சக்தியை நான் பலப்படுத்தவேண்டுமென்றும் அவர் சொன்னார். தனித்தியானவேளையில் தேவன் எபிரேயர் 12:1 ல் கூறப்பட்டுள்ள பொறுமையோடு ஓடக்கடவோம் என்ற வசனத்திலிருந்து என்னோடு பேசினார். சகிப்புத்தன்மையைப் பலப்படுத்துவதற்காக என் கருத்தைக் கவருவதற்குத் தேவன் திட்டமாக முயற்சித்தார். கிரேக்க மாரத்தான் ஓட்டத்தில் ஓடுவதற்குப் பயிற்சி எடுப்பதின்மூலம் இந்த இயல்பை என்னால் பலப்படுத்தமுடியும் என்பதை உணர்ந்தேன். என் உள்ளத்தில் முதலாவதாக உண்டான கேள்விகளில் ஒன்று சகிப்புத்தன்மை ஏன் இவ்வளவு முக்கியம் என்பதே.

காலம் கடந்தது; மாரத்தான் ஓட்டம் முடிவடைந்தநிலையில் அந்தக் கேள்விக்குத் தீர்வான சிலக் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டேன்.

  1. வாழ்க்கையின் ஓட்டத்தில் வேதனையும் பாடுகளும் நிறைந்த சந்தர்ப்பங்கள் நிச்சயம் வரும். சகிப்புத்தன்மையில் பலப்பட்டவர்களே ஓட்டத்தை முடிப்பார்கள்.
  2. மாரத்தான் ஓட்டத்தை முடித்தவர்கள் ஒரு பதக்கந்தான் பெறுவார்கள். ஆனால், வாழ்க்கை ஓட்டத்தில் இறுதிவரை நிலைநிற்கிறவர்கள் மகிமையின் கிரீடத்தைப் பெறுவார்கள்.
  3. இன்னல்களையும் வேதனைகளையும் நாம் சகிக்கும்போது, நம்புவதற்கரிய திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
  4. நாம் சகிப்புத்தன்மையில் பலப்படும்போது பிறருடைய துன்பங்களையும் துயரங்களையும் மதிக்கக் கற்றுக்கொள்வோம்
  5. வாழ்க்கை ஓட்டத்தில் தலைசிறந்த வீரனாக ஓடுவதற்கு உதவும் முக்கிய பண்பு பொறுமையாகும். பாடுகளைத் தாங்குவதற்குக் கற்றுக்கொள்ளும்போது அத்தன்மையை நாம் பெற்றுக்கொள்ளுகிறோம்.
  6. ஆரோக்கியமடைந்தபின் வாழ்க்கையைக் கூடுதல் அனுபவிப்பதற்கு சகித்தல் உதவுகிறது.

கற்பதற்கு இன்னும் ஏராளம் உண்டென்பது நிச்சயம். ஆனால், நான் கற்றுக்கொண்டேயிருக்கிறேன். நான் ஓடிக்கொண்டேயிருக்கிறேன். நான் வளர்ந்துகொண்டேயிருக்கிறேன். எத்தகைய சாகசம் இது!.

Bookmark and Share
0 விளக்கக் குறிப்புகள்
உங்கள் கருத்துக் குறிப்பை விட்டுவிடவும்
பெயர்:

*
உங்கள் மின் அஞ்சல்:

உங்கள் இணையதளம்:

செய்தி:

கீழேயுள்ள படிமத்தில் குறியீட்டைப் புகுத்தவும்

ஆராய்ச்சி செய்யவும்
யார் பேசுகிறாரென்பதைப் பாருங்கள்
அதிகப் பாராட்டுக்கள் பெற்ற எங்களது கட்டுரையின் ஒரு கண்ணோட்டம்
Tags