Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

Sammy's Blog

சொப்பனத்தின் மரணமும் உயிர்ப்

பொதுவாக நான் ஒரு சொப்பனக்காரன். என்னுடைய சொப்பனத்தில் அதிகமும் எனக்குரியவைகளே. சில சொப்ப்னங்கள் எனக்குள்ளிருந்தல்ல மேலிருந்தே உருவாகின்றன. அத்தகைய சொப்பனங்களில் ஒன்று என் இருதயத்தில் வேரிடும்போது, அளவற்ற வல்லமை காணப்படுகிறது. ஏனெனில் அந்த சொப்பனம் அளவற்ற வல்லமையின் பிறப்பிடமாகிய இயேசுவிடமிருந்தே வருகிறது. இந்த சொப்பனம் நிறைவேறுவதற்குரிய ஒரு வழிவகையை நான் கண்டுபிடித்திருக்கிறேன்.

கிரேக்க மாரத்தான் ஓட்டத்தில் ஓடுவதற்கு நானும் கென் லீபர்க் என்பவரும் சொப்பனங்கண்டபோது அது பரலோகத்திலிருந்தே இறங்கி வந்தது என்று நான் உண்மையாகவே நம்பினேன். ஒரு வாகனவிபத்தில் கென் கொல்லப்பட்டபோது அந்த சொப்பனம் அவரோடு புதைக்கப்பட்டது. நான் ஓடுவதை நிறுத்தினேன்; என்னுடைய எடையும் மிகவும் அதிகரித்தது.

முப்பது ஆண்டுகளுக்குப்பின், என்னில் புற்றுனோய் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டபோது, தேவன் அந்தச்சொப்பனத்தை உயிர்ப்பித்தார். உங்களுக்குப் புற்றுனோய் இருக்கிறதது என்று மருத்துவர் உங்களோடு சொல்லும்போது உங்கள் வாழ்க்கையை நீங்கள் ஆராய்ந்து பார்க்கிறீர்கள். அதையே நான் செய்தபோது கிரேக்க மாரத்தான் ஓட்டத்தில் நான் ஓடவேண்டும் என்கிற ஒரு சொப்பனந்தவிர தேவன் எனக்குக் கொடுத்த எல்லா சொப்பனங்களையும் அவரே கொண்டு நடத்தினார் என்பதை உணர்ந்தேன்.

உயிர்ப்பிக்கப்பட்ட சொப்பனத்தின் அடிப்படையில் நான் பயிற்சியெடுக்க ஆரம்பித்தேன். அது கூடாது என்று எனக்குத் தோன்றிற்று. புற்று நோய், அறுவை சிகிச்சை மற்றும் காயங்கள் போன்ற் பிரச்சனைகள் என்னைப் பார்த்து, டிப்பிற் உன்னால் அதைச்செய்ய முடியாது; அது கூடாத காரியம் என்று கூக்கிரலிட்டன. ஆனால், தேவன் ஒரு சொப்பனம் கொடுப்பாரேயானால் அது நிறைவேறியேயாகும் என்று அதிகக்காலத்துக்கு முன்பே நான் கற்றிருந்தேன். ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு கென்னுடைய மூத்த மகளாகிய கிறிஸ்டாவும் நானும் கிரேக்க நாட்டிலுள்ள மாரத்தான் கிராமத்திலிருந்து ஓட ஆரம்பித்து ஒலிம்பிக் அரங்கத்தை சென்ற்டைந்தோம். இவ்வாறு கென்னும் நானும் கண்ட சொப்பனம் நிறைவேறிற்று.

உங்களுடைய சொப்பனங்கள் கூடாததாய்த் தோன்றும்போது ஒரேயொரு தகுந்த கேள்வி மாத்திரமேயுண்டு. அந்த சொப்பனம் மேலிருந்து வந்த்தா, அல்லது உங்களுக்குள்ளிருந்து வந்ததா? உன்னதத்திலிருந்து அந்த சொப்பனம் வந்திருக்குமேயானால் தேவன் அதை நிறைவேற்றுவார். தேவன் ஆரம்பிக்கிறதை அவர் முடிப்பார்.

Bookmark and Share
0 விளக்கக் குறிப்புகள்
உங்கள் கருத்துக் குறிப்பை விட்டுவிடவும்
பெயர்:

*
உங்கள் மின் அஞ்சல்:

உங்கள் இணையதளம்:

செய்தி:

கீழேயுள்ள படிமத்தில் குறியீட்டைப் புகுத்தவும்

ஆராய்ச்சி செய்யவும்
யார் பேசுகிறாரென்பதைப் பாருங்கள்
அதிகப் பாராட்டுக்கள் பெற்ற எங்களது கட்டுரையின் ஒரு கண்ணோட்டம்
Tags