Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

Sammy's Blog

ஓட்டப்பந்தயம் என்னும் என்னுடைய புத்தகத்துக்காக ரயன் ஹாலை நான் பேட்டிகண்டபோது கல்லூரியில் ஓடிய ஒரு மைல் தூரத்தை நிறுத்திவிட்டு, நீண்ட தூரம் ஓட ஆரம்பித்ததின் காரணம் என்ன என்று நான் அவரைக் கேட்டேன். அதற்கு அவர் கொடுத்த பதில் கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் ஓட்டத்துக்குமான சில முக்கிய கோட்பாடுகளை வெளிப்படுத்தியது.

அவர் இளைஞனாயிருந்தபோது, ஒரு மைல் தூரம் ஓடுவதிலேயே தன் சிந்தையை செலுத்தியிருந்தார் என்று அவர் முதலில் என்னிடம் கூறினார். அந்த ஓட்டத்தில் உலகத்திலேயே மிகச்சிறந்த வீரனாயிருக்கவேண்டுமென்று அவர் கனவுகண்டார். கல்லூரியில் அவர் சந்தித்த பல விரக்திகள் மற்றும் தோல்விகளுக்குப்பின், தேவன் தன்னுடைய ஓட்டத்தைக்குறித்துக் கொண்டிருக்கிற நோக்கத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். சரிதான் ஆண்டவரே, நான் எத்தகைய ஓட்டத்தில் ஓடவேண்டுமென்று நீர் தீர்மானித்தாலும் நான் அதைக்குறித்துக் கவலைப்படவில்லை; நீர் என்னை எதற்காகப் படைத்திருக்கிறீரோ அதைமாத்திரமே செய்ய நான் விரும்புகிறேன் என்று தேவனிடம் அவர் கூறினார்.

அந்த ஜெபத்திற்குப்பிறகு, ரயன் நீண்டதூர ஓட்டப்பந்தயங்களில் ஓட முயற்சிசெய்தார்; அது அவருக்கு மிகவும் இயல்பாய் அமைந்திருந்தது. இதற்கு முன்னமேயே நான் இதைக்குறித்து சிந்தித்திருந்தால் நலமாயிருந்திருக்குமே என்று அவர் பின்னால் எண்ணீனார். அவர் மிக விரைவாக ஓடியதுமட்டுமல்லாது, அரை மாரத்தானை ஒரு மணிநேரத்துக்குள்ளாக ஓடிய முதல் அமெரிக்கன் அவரே; மேலும் சமீக காலத்தில் மாரத்தான் ஓடிய அமெரிக்கர்களில் அவரே மிகவும் வேகமாக ஓடினார். தன்னுடைய ஓட்டம் எது என்பதை ரயன் கண்டுகொண்டபோது, அவர் முந்தைய சாதனைகளையெல்லாம் முறியடித்தார்.

பிறருடைய நன்மதிப்பைப் பெறவேண்டுமென்பதற்காக சில காரியங்களை செய்ய அடிக்கடி நாம் விரும்புகிறொம். அல்லது, நம்முடைய சொந்தத்தில் நமது மிகச்சிறந்த ஆற்றலின் உச்சத்தை அடையலாமென்று எண்ணுகிறோம். ஆனால், ரயன் செய்ததுபோல நாமும் தேவனுடைய திட்டத்துக்கு நம்முடைய கரத்தையும் இருதயத்தையும் திறக்கும்போது, நாம் நம்முடைய முழு ஆற்றலோடும் ஓடமுடியும். ஆண்டவரே உம்முடைய திட்டத்தை எனக்குக் காண்பியும் என்று நாம் சொல்லும்பொழுதுமாத்திரமே ஓட்டம் இயல்பாக அமையும். யதார்த்தத்தில் அது தெய்வீகமான இயற்கையாயிருக்கும்.

உங்கள் இருதயத்தைத் திறந்து, வாழ்க்கையில் நீங்கள் ஓடுவதற்காகத் தேவன் நியமித்திருக்கிற ஓட்டத்தை அவர் உங்களுக்குக் காண்பிக்கும்படி அவரிடம் கேளுங்கள்.அப்போது ஒரு வெற்றி வீரனைப்போல நீங்களும் ஓடுவீர்கள்.

Bookmark and Share

ஒரு மணிநேரத்துக்குள் அரை மாரத்தான் ஓடிமுடித்த ஒரே அமெரிக்கன் ரயன் ஹால். இந்த வாரம் மாரத்தான் ஓடிய எல்லா அமெரிக்கர்களிலும் இவர்தான் மிகவும் வேகமாக் ஓடி குறிப்பிட்ட தூரத்தை 2:04:58 மணி நேரத்தில் கடந்தார். ஆச்சரியம்! 26.2 மைல்களை 2 மணிநேரம் 5 நிமிடத்துக்குள் ஓடினார். அதாவது, ஒரு மையிலுக்கு 4 நிமிடம் 46 வினாடிகள் வேகத்தில் 26 மைல்களுக்குக் கூடுதலாக ஓடினார். ஆனால், அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் ஓடும்போதுள்ள அவருடைய் மனப்பான்மையே.

முந்தைய ஆண்டில் அவ ர் பாஸ்ற்றன் மாரத்தான் ஓடியபிறகே ஓட்டப்பந்தயம் என்னும் என்னுடைய புத்தகத்திற்காக நான் அவரை நேர்காணல் நடத்தினேன். அவர் என்னிடம், நான் ஓடிக்கொண்டிருக்கும்போது, கடினமான அனுபவங்களைக் கடக்கநேரிட்டால், தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கவேண்டும் என்று மாத்திரமே நான் ஜெபிப்பேன். அத்தகைய கடினமான நேரங்களில் அவரோடு தொடர்புகொள்ளும் வழிமுறைகளைக் கண்டறிய நான் விரும்புவேன்; ஏனெனில், அவருடைய பிரசன்னத்தில் இருக்கும்போதெல்லாம் நான் எப்போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறென். அவரோடு தொடர்புகொள்வதும் அவருடைய சமுகத்திலிருப்பதுமே மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள சிறந்தவழி என்று கூறினார்.


> கூடுதலாக வாசிக்கவும்
Bookmark and Share

புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையை செய்யுமுன் நான் இடையைக் குறைக்கவேண்டுமென்றும், சகிக்கும் சக்தியைக் கூட்டவேண்டுமென்றும் மருத்துவர் என்னிடம் சொன்னபோது இந்த இரு காரியங்களையும் செய்வதற்குரிய ஒரே வழி ஓடுவது என்பதை நான் உண்ர்ந்தேன். அப்போதுதான் இந்த வியக்கத்தக்க முயற்சி ஆரம்பித்தது. ஓட்டத்துக்குரிய கொள்கைகளுக்கும் வேதத்தின் உண்மைகளுக்குமிடையேயுள்ள தொடர்பை அப்பொழுது நான் கண்டுபிடித்தேன்.

மருத்துவர் பயன்படுத்திய முக்கிய வார்த்தை சகித்தல் என்பதே. சிகிச்சைக்குப்பின் பூரண ஆரோக்கியமடைய இது மிகவும் உதவியாயிருக்கும் என்று அவர் சொன்னார். அவர் சொன்னது சரியே. மிகவும் நல்ல முறையில் நான் ஆரோக்கியமடைந்தேன்.


> கூடுதலாக வாசிக்கவும்
Bookmark and Share

பொதுவாக நான் ஒரு சொப்பனக்காரன். என்னுடைய சொப்பனத்தில் அதிகமும் எனக்குரியவைகளே. சில சொப்ப்னங்கள் எனக்குள்ளிருந்தல்ல மேலிருந்தே உருவாகின்றன. அத்தகைய சொப்பனங்களில் ஒன்று என் இருதயத்தில் வேரிடும்போது, அளவற்ற வல்லமை காணப்படுகிறது. ஏனெனில் அந்த சொப்பனம் அளவற்ற வல்லமையின் பிறப்பிடமாகிய இயேசுவிடமிருந்தே வருகிறது. இந்த சொப்பனம் நிறைவேறுவதற்குரிய ஒரு வழிவகையை நான் கண்டுபிடித்திருக்கிறேன்.

கிரேக்க மாரத்தான் ஓட்டத்தில் ஓடுவதற்கு நானும் கென் லீபர்க் என்பவரும் சொப்பனங்கண்டபோது அது பரலோகத்திலிருந்தே இறங்கி வந்தது என்று நான் உண்மையாகவே நம்பினேன். ஒரு வாகனவிபத்தில் கென் கொல்லப்பட்டபோது அந்த சொப்பனம் அவரோடு புதைக்கப்பட்டது. நான் ஓடுவதை நிறுத்தினேன்; என்னுடைய எடையும் மிகவும் அதிகரித்தது.


> கூடுதலாக வாசிக்கவும்
Bookmark and Share
ஆராய்ச்சி செய்யவும்
யார் பேசுகிறாரென்பதைப் பாருங்கள்
அதிகப் பாராட்டுக்கள் பெற்ற எங்களது கட்டுரையின் ஒரு கண்ணோட்டம்
Tags